Just In
- 14 min ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 48 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 1 hr ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
Don't Miss!
- News
மேற்கு வங்கத்தை.. வங்கதேசத்துடன் இணைக்க முயலும் மம்தா.. மே. வங்க பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி கொடூரம்: உருக்கமான கவிதை எழுதிய பரியேறும் பெருமாள் இயக்குநர்

சென்னை: பெண் பிள்ளைகளை நினைத்து பெற்றோர் கவலையில் உள்ள நிலையில் பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இதையடுத்து பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களின் பாதுகாப்பை நினைத்து கவலையிலும், பயத்திலும் உள்ளனர்.

எந்நேரமும் பெண் பிள்ளைகளை பக்கத்திலேயே வைத்திருக்க முடியாது அல்லவா, அவர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நடந்துவிடுமோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள்.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ரம்யா கிருஷ்ணனுக்கு 37 தான், ஆனால் பாவம் விஜய் சேதுபதிக்கு 90
ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக
எனக்கு எந்த பயமும் இல்லை பதட்டமுமில்லை
என் மகளுக்கு நான் கடலை காட்டுவேன்
கடலின் அழகை காட்டுவேன்
அழகின் ஆழம் காட்டுவேன்
ஆழத்தில் உயிர்களை காட்டுவேன்
உயிர்களின் விநோதம் காட்டுவேன்
விநோதங்களின் விபரீதங்களை காட்டுவேன்
விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
காரணங்களின் முடிவுகளை காட்டுவேன்
முடிவுகளின் இழப்புகளை காட்டுவேன்
இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
நீச்சலின் நியாயம் காட்டுவேன்
நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தால்
மறுபடியும் கடல் காட்டுவேன்
அதன் அழகை காட்டுவேன்
அது அவளுடைய கடல்
அது அவளுடைய அலை
அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
ஆழம் போவதும்
கரை நடப்பதும்
அவள் உரிமை
--
மாரிசெல்வராஜ்