Bison Day 5 collection : பைசன் 5 நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: துருவ் விக்ரம் நடித்த "பைசன் காளமாடன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஐந்து நாட்களில் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முதல் வார வசூலில் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருவதால் விரைவில் கலெக்சன் ரூ. 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழை திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் துருவ் விக்ரம், கபடி வீரராக நடித்திருக்கிறார். கடுமையான சாதிய சிக்கல் நிறைந்த சமூக சிக்கலில், அவர் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டு அவற்றை மீறி எப்படி மாநில, தேசிய அளவில் வீரராக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தங்க பதக்கத்தை எப்படி வென்றார் என்பது தான் பைசன் படத்தின் கதை.

பைசன் வசூல்:1990களில் தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியில் நிலவிய சமூக சிக்கல்களை மையமாக வைத்து வரலாற்று உண்மைகளை கருப்பொருளாக கொண்டு மாரி செல்வராஜ் இப்படத்தை எடுத்துள்ளார். படத்தை பார்த்த பலர் பாராட்டினாலும், பைசன் படம் சாதிய பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறி சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. ஆனால், இந்த போராட்டங்களால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படாத சூழலில், பைசன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
5 நாள் வசூல்: பைசன் திரைப்படம் முதல் நாளில் ₹2.7 கோடி வசூலித்த இத்திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் சீரான முன்னேற்றத்தைக் காட்டியது. இரண்டாம் நாள் சனிக்கிழமை ரூ.3.4கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.5.5 கோடியும், தீபாவளியன்று ரூ.6.6 கோடி வசூலை அள்ளியது. நேற்றும் பொதுவிடுமுறை என்பதால் படத்தின் வசூல் ரூ.5.50 கோடியாக இருந்தது இதன் மூலம், படத்தின் மொத்த வசூல் ₹22.1டி கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாட்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வகையில் வசூலை அள்ளில் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











