Bison Box office: மாரி செல்வராஜின் பைசன் படத்தின் 10ம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: துருவ் விக்ரம் நடித்த 'பைசன் காளமாடன்' திரைப்படம் 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகி பத்து நாட்களாகியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பதிவு செய்துள்ளது. முதல் பத்து நாட்களில் இப்படம் ₹32 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாழை படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இகதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ள திரைப்படம் பைசன். இதில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், நடராஜன் சுப்பிரமணியம், அர்ஜுன் தாஸ், பசுபதி, லால், ராதிகா சரத்குமார், ராஜீவ் ஜெயப்பிரகாஷ் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சத்யன் சூர்யன் மேற்கொள்ள, படத்தொகுப்பை செல்வா ஆர்.கே. கையாண்டுள்ளார்.

mari selvaraj bison box office
Photo Credit:

மாரி செல்வராஜின் பைசன்: கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் வாழ்ந்துள்ளார். படத்தை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். இத்திரைப்படத்தின் வெற்றி விழா சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில், மாரி செல்வராஜ், அமீர், பா ரஞ்சித், பசுபதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய துருவ் விக்ரம், இந்த படத்துக்காக அனைவரும் பெரிய உழைப்பை போட்டிருக்கிறார்கள். நிறைய ஃபைட்டர்ஸ் உண்மையாகவே அடி வாங்கினார்கள். இந்த படத்தில் பசுபதி எனக்கு அப்பாக நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் என்னை ரொம்பவே கம்ஃபோர்ட்டாக பார்த்துக்கொண்டார். சர்வதேச கபடி போட்டீல் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு இந்த நேரத்தில் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். சினிமாவுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய 27 வயது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதைவிடவும், இந்தப் படத்துக்காக செலவழித்த காலத்தில் பல விஷயத்தை கற்றுக்கொண்டேன் என்று துருவ் பேசி இருந்தார்.

பத்தாம் நாள் வசூல்: இத்திரைப்படம் வெளியாகி இன்னோது பத்து நாட்களாகி இருக்கும் நிலையில் இப்படம் இதுவரை ரூ 32 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் ₹50 கோடியை வசூலை இன்னும் ₹18 கோடி தேவைப்படுகிறது. இப்படத்திற்கு தொடர்ந்து மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் இப்படம் நிச்சயம் ரூ 50 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமையான நேற்று இப்படம் ரூ3 கோடியை வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X