Bison Day 2 Box Office - எதிர்ப்பு வந்தால் என்ன பாஸ்?..மாரி செல்வராஜின் பைசன் கெத்துதான்..2வது நாள் வசூல் மாஸ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றோடு இயக்குநர் கலந்து சொன்ன விதம் ரசிக்கும்படி இருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளில் அந்தப் படம் செய்த வசூல் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கி துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருந்தது. இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களும் பெரிதாக தனக்கு கை கொடுக்கவில்லை என்பதால் இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் துருவ். அதேபோல் மாரியின் இயக்கம் என்பதால் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் பெரிய ஹைப்பை படம் சந்தித்திருந்தது.

படம் சூப்பர்தான்: எதிர்பார்த்தபடியே மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். சாதி பாகுபாடு அறவே கூடாது என்பதையும், சுய சாதிக்குள்ளேயே சாதி வெறி பிடித்தவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று பல விஷயங்களை இதில் பேசியிருக்கிறார் அவர். இதன் காரணமாக ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj s Bison Movie Second Day Box Office is 3 55 Crores in India Here are Details
Photo Credit:

துருவ் விக்ரம்தான் டாப்: இவை அனைத்தையும் தாண்டி விக்ரமின் மகன் துருவ்தான் படத்தில் டாப்பாக ஜொலிக்கிறார். இரண்டு வருடங்கள் காத்திருந்து, கடுமையாக உழைத்ததற்கான கூலியை இப்படத்தில் அவர் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சீனிலும் தனது நடிப்பில் மிரட்டும் அவர் கண்டிப்பாக கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இடத்துக்கு செல்வார் என்பது உறுதியாகிவிட்டது.

கைது செய்யுங்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மாரி செல்வராஜின் படங்கள் வந்தாலே ஒரு க்ரூப் எதிர்க்க வரும். அதேபோல் இந்தப் படத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சத்ரிய சான்றோர் படை என்ற கட்சியின் ஹரி நாடார் என்பவரும் இன்னும் சிலரும் பைசனை எதிர்த்திருக்கிறார்கள். மேலும் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வசூலில் கெத்து: இப்படி எதிர்ப்புகள் கிளம்பினாலும் பட்ம் ஃபுல் ஃபார்மில் வசூலில் சென்றுகொண்டிருக்கிறது. Sacnilk இணையதள கூற்றுப்படி முதல் நாளில் 2.55 கோடி ரூபாயை வசூலித்த அப்படம் இரண்டாவது நாளான நேற்று மூன்று கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ஆகமொத்தம் இந்தியாவில் அந்தப் படம் 2 நாட்களில் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X