பிரின்ஸ் சூட்டிங்… சூப்பர் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் ஹீரோயின்: எஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சென்னை: 'டான்' படத்தைத் தொடர்ந்து 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

Recommended Video

தருமபுரி To Kannada Cinema | Youtuber Patta Murugan Exclusive Interview

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்தியேன ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மரியா கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், 'பிரின்ஸ்' படத்தின் சூட்டிங் குறித்து, ஹீரோயின் மரியா சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயன்

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயன்

சில தோல்விப் படங்களால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயன், 'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களுடன் கம்பேக் கொடுத்துள்ளார். டாக்டர், டான் இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி கலெக்‌ஷனை தட்டித் தூக்கியிருந்தது. இதனால் உற்சாகமடைந்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ், அயலான், மாவீரன் என மீண்டும் வேகமெடுத்துள்ளார்.

முதன்முறையாக தெலுங்கில்

முதன்முறையாக தெலுங்கில்

இதுவரை கோலிவுட் இயக்குநர்களுடன் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். 'பிரின்ஸ்' என்ற டைட்டிலில் உருவாகி வரும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியாவும், சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு வெளியாகும் பிரின்ஸ்

தீபாவளிக்கு வெளியாகும் பிரின்ஸ்

'பிரின்ஸ்' திரைப்படம் பக்கா கமர்சியலாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடி டெம்ப்ளேட்டுகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அதனால், பாடல்களும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என, படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பிரின்ஸ் படப்பிடிப்பு அப்டேட்

பிரின்ஸ் படப்பிடிப்பு அப்டேட்

'பிரின்ஸ்' படம் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது 'பிரின்ஸ்' படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டதாக, ஹீரோயின் மரியா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மரியா, "பிரின்ஸ் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது, நான்கு மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங்கில் கலந்துகொண்டது மறக்க முடியாத தருணம். 'பிரின்ஸ்' குழுவினர் அனைவரும் என்னை அன்பாக பார்த்துக்கொண்டதாக" நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 'பிரின்ஸ்' படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X