twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரலாற்றின் பிரம்மாண்டம்.. கொண்டாடவேண்டிய தருணம்.. பொன்னியின் செல்வன் ரசிகர்களின் கருத்து!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது. அதிகாலையில் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் உற்சாக மிகுதியால் படத்தை பார்த்து நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

    ஆதித்யக் கரிகாலன் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் குந்வையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரத்தையே ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

    த்ரிஷாவை காதலிக்கும் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளனர். வந்தியத்தேவன் குறித்து வரலாற்றில் சிறு குறிப்பே இருந்த நிலையில், கல்கி தனது கற்பனையில் விரித்து அந்த கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வனின் நாயகனாக்கினார். படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

    பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

    சிறு தயக்கம் இருந்தது

    சிறு தயக்கம் இருந்தது

    அதிகாலை முதல் ஷோவை பார்த்து விட்டு வெளியில் வந்த ஒரு சினிமா பிரியர். கதை அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் படத்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும். ஸ்கிரீன் பிளே எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் கொடுத்து இருந்ததால், படம் எப்படி இருக்குமோ என்று சிறு தயக்கம் இருந்தது. ஆனால், படம் அந்த தயக்கத்தை உடைத்து உள்ளது.

    இது மட்டும் குறை

    இது மட்டும் குறை

    2மணி நேரம் 50நிமிடம் படம் என்பதால் ரொம்ப கதை இழுக்குமோ என்ற எண்ணம் இருந்தது ஆனால், படம் போனதே தெரியாமல், காட்சிக்கு காட்சி படத்தில் சுவாரசியம் கூடிக்கொண்டே இருந்தது. முக்கியமா சொல்லனும்னா கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருந்தது. ஆனால், படத்தில் செந்தமிழ் இல்லை என்பது தான் ஒரே குறை இருந்தாலும் அது பெரிய தவறாக தெரியவில்லை.

    அனைவரின் நடிப்பும் அருமை

    அனைவரின் நடிப்பும் அருமை

    மற்றொரு ரசிகர், பொன்னியின் செல்வன் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய கதை. விக்ரம், கார்த்தி அனைவரின் கதாபாத்திரமும் அருமை, அனைவருக்கும் சமமாக ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட படம் சூப்பரா பிரம்மாண்டமா இருக்கு, வரலாற்றின் பிரம்மாண்டத்தை அனைவரும் பிரம்மாண்டமாக .கொண்டாடவேண்டிய தருணம் இது. குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கவேண்டிய படம்.

    BGM தாறுமாறு

    BGM தாறுமாறு

    பொன்னியின் செல்வம் புத்தம் படித்தவர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால், புத்தகம் படிக்காதவர்களுக்கும் படம் புரியும் படிதான் எடுத்து இருக்கிறார்கள். படத்தில் ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரமின் நடிப்பு மாஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை BGM தாறுமாறாகவே உள்ளது என்றனர்.

    இது ஒரு தொடக்கம்

    இது ஒரு தொடக்கம்

    படம் பார்த்த மற்றொரு ரசிகரும் படம் ரொம்ப நல்லா இருக்கு, இது ஒரு தொடக்கம் தான், இரண்டாம் பாகத்தில் தான் படத்தின் மொத்த கதையும் இருக்கு. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து படம் பார்த்தார்கள். அவ்வளவு பெரிய கதையை சுருக்கமா அழகா சொல்லி இருக்கிறார்கள் என்றனர்.

    English summary
    Kalki's Ponniyin Selvan is a sprawling epic that has so far remained elusive to film. Ponniyin Selvan release today early morning. Ponniyin Selvan Public Review,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X