Just In
- 52 min ago
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
- 59 min ago
பிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ!
- 1 hr ago
மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த சிங்கப்பெண் ஷிவானி.. ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு!
- 1 hr ago
உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!
Don't Miss!
- News
புதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு
- Lifestyle
கும்பத்திற்கு செல்லும் புதனால் பல சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
அவங்க வேண்டும்.. 2 தமிழக வீரர்களுக்காக குரல் தந்த இங்கிலாந்து கேப்டன்.. நேற்று நடந்த தரமான சம்பவம்
- Education
ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்!
- Finance
ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..? உண்மை நிலவரம் என்ன..!
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விசுவாசம் தீம் மியூசிக்கை காப்பி அடித்த பாலிவுட் படம்.. அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இயக்குனர்
சென்னை: பாலிவுட்டில் வெளியாகவுள்ள மேர்ஜவான் படத்தின் டிரைலரில் அஜித் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
சமீப நாட்களாக கோலிவுட் படங்களின் காட்சிகளை அதிகமாக பாலிவுட் படங்களில் பயன்படுத்துகிறார்கள். நிறைய நல்ல காட்சிகளை அப்படியே கோலிவுட்டில் இருந்து திருடி பாலிவுட்டில் பயன்படுத்துகிறார்கள்.
தென்னிந்திய படங்கள் பாலிவுட் படங்களை விட புதிய உயரத்தை தொட்டு இருக்கிறது. இதனால் பாலிவுட் படங்கள் தற்போது தென்னிந்தியாவை சார்ந்து இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

என்ன படம்
இந்த நிலையில்தான் பாலிவுட்டில் வெளியாகவுள்ள மேர்ஜவான் படத்தின் டிரைலரில் அஜித் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது. மேர்ஜவான் படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார். அதேபோல் சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் பிரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

மோசம்
இதை மிலாப் சவாரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதை பார்த்துவிட்டு பலரும், அட இது லோ பட்ஜெட் கேஜிஎப் பாஸ் என்று விமர்சனம் செய்துள்ளனர். அம்மி கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போலவே இதன் மேக்கிங் இருந்தது.

மிக மோசமான காட்சிகள்
மிக மிக மோசமான சண்டை காட்சிகள். சகிக்க முடியாத பாடல். மோசமான வசனம் என்று இந்த டிரைலர் முழுக்க 2000 தொடக்கத்தில் வந்த தெலுங்கு படம் போலவே இருந்தது. இதெல்லாம் போக இன்னொரு மோசமான விஷயமும் இதில் நடந்துள்ளது. இதில் அஜித் படத்தின் தீம் பாடலை காப்பி அடித்துள்ளனர்.

என்ன காப்பி
ஆம், அஜித் நடித்து வெளியான விசுவாசம் படம் பெரிய ஹிட் அடித்தது. இதன் தீம் மியூசிக்கை இதில் அப்படியே காப்பி அடித்துள்ளனர். டடடடான்... டடடடான் என்று வரும் மாஸான இமான் தீம் மியூசிக்கை அப்படியே கொஞ்சம் கூட மாற்றாமல் காப்பி அடித்துள்ளனர்.
|
என்ன சிக்கல்
இதனால் தற்போது நெட்டிசன்கள் படத்திற்கு எதிராக கடுமையாக டிவிட் செய்து வருகிறார்கள். அதிலும் அஜித் பேன்ஸ் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் 5 பேரையும் வைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆம் இந்த படத்திற்கு யோ யோ ஹானி சிங், பிரசாந்த் பிள்ளையை, தன்ஷிகி, பயல் தேவ், மீட் ப்ரோஸ் ஆகிய 5 பேர் இசை அமைத்துள்ளனர்.

கருமமே
ஆனால் இத்தனை 5 பேர் இசை அமைத்தும் கூட ஒரு தீம் மியூசிக்கை போய் காப்பி அடித்து இருக்கிறீர்களே என்று இணையத்தில் படக்குழுவை திட்டி வருகிறார்கள்.