Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படியா காப்பி அடிப்பீங்க.. பாலிவுட்டை உலுக்கிய இமான் டிவிட்.. பின்வாங்கிய டைரக்டர்.. என்ன நடந்தது?
சென்னை: தன்னுடைய படத்தின் தீம் மியூசிக்கை திருடிவிட்டார்கள் என்று இசை அமைப்பாளர் இமான் செய்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. இமான் செய்த டிவிட் பாலிவுட் திரை உலகை உலுக்கி உள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி 10ம் தேதி விசுவாசம் படம் வெளியானது. வசூல் ரீதியாக இந்த படம் அஜித்திற்கு பெரிய ஹிட் கொடுத்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசை அமைத்து இருந்தார். படத்தின் தீம் மியூசிக் இதில் பெரிய அளவில் ஹிட் அடித்து இருந்தது.
விசுவாசம் தீம் மியூசிக்கை காப்பி அடித்த பாலிவுட் படம்.. அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இயக்குனர்

என்ன சர்ச்சை
இந்த நிலையில் பாலிவுட்டில் வெளியாகவுள்ள மேர்ஜவான் படத்தின் டிரைலரில் விசுவாசம் படத்தின் தீம் மியூசிக்கை காப்பியடித்து உள்ளனர். மாஸான இமான் தீம் மியூசிக்கை அப்படியே கொஞ்சம் கூட மாற்றாமல் காப்பி அடித்துள்ளனர். இந்த வீடியோ இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது.
|
இமான் டிவிட்
இந்த நிலையில் இது தொடர்பாக விசுவாசம் படத்தின் இசை அமைப்பாளர் இமான் டிவிட் செய்துள்ளார். அதில், இந்தி படமான மேர்ஜவானில் விசுவாசம் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு குழு என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அதேபோல் ஆடியோ லேபிள் குழுவும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.
|
செம வைரல்
இதையடுத்து அஜித் ரசிகர்கள் வரிசையாக இந்த டிவிட்டை ரீ டிவிட் செய்து வைரல் செய்தனர். பாலிவுட் படங்களில் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று நிறைய டிவிட் செய்து மேர்ஜவான் டிரைலரை வைரல் செய்தனர்.

பின்வாங்கினார்கள்
இதையடுத்து படத்தின் தயாரிப்பு குழு வேகமாக பின்வாங்கியது. படத்தின் டிரைலர் வீடியோவின் விளக்கத்தில் இமான் பெயரும் இசை அமைப்பாளர் என்று சேர்க்கப்பட்டது. அதேபோல் படத்தின் விக்கிப்பீடியா பக்கத்திலும் கடைசியில் இமான் பெயர் சேர்க்கப்பட்டது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டதால் படக்குழு பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.