»   »  உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மார்க் வால்பர்க் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. முதல் பத்து இடங்களில் மூன்று இந்திய நடிகர்கள் உள்ளனர்.

பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பர்க்.

வால்பர்க்

வால்பர்க்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள மார்க் வால்பர்க் ஓராண்டில் ரூ. 435.9 கோடி சம்பாதித்துள்ளார். டிரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் டாடி இஸ் ஹோம் 2 படங்களால் அவருக்கு இவ்வளவு சம்பளம் கிடைத்துள்ளது.

ராக்

ராக்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ராக் என்கிற ட்வெய்ன் ஜான்சன் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரது சம்பளம் ரூ. 416.6 கோடி ஆகும்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 8வது இடத்தில் உள்ளார். அவரது சம்பளம் ரூ. 243.7 கோடி ஆகும். 9வது இடத்தில் இருக்கும் சல்மான் கானின் வருமானம் ரூ. 237.2 கோடி ஆகும்.

அக்ஷய்

அக்ஷய்

பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் அக்ஷய் குமாருக்கு ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாவது இடம் கிடைத்துள்ளது. அவரது வருமானம் ரூ. 227.6 கோடி ஆகும்.

ஜாக்கி சான்

ஜாக்கி சான்

கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான சம்பள விபரங்களை வைத்து ஃபோர்ப்ஸ் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 100 பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் ஜாக்கி சானுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. அவரது சம்பளம் ரூ. 314.1 கோடி ஆகும்.

English summary
Indian superstars Shahrukh Khan, Salman Khan and Akshay Kumar are among the top 10 highest paid actors in the world in a list compiled by Forbes that has been topped by "Transformers" actor Mark Wahlberg.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X