»   »  தேசிய விருது பெற்ற பிரியாமணிக்கு வரும் 23-இல் டும் டும் டும்

தேசிய விருது பெற்ற பிரியாமணிக்கு வரும் 23-இல் டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் வரும் 23-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது.

'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

 தேசிய விருது

தேசிய விருது

டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.

காதல்

காதல்

பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

 23-இல் திருமணம்

23-இல் திருமணம்

பிரியாமணி- முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24-ஆம் தேதி மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

அதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இருவரது பெற்றோர்களும் கவனித்து வருகிறார்கள்.

English summary
Actress Priyamani is going to marriage his lover Mushtafa on Aug 23 in Banglore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X