»   »  "என்னத்த சொல்ல"..: திருமணம் பற்றி கேட்டால் இலியானா இப்படி சொல்லிட்டாரே

"என்னத்த சொல்ல"..: திருமணம் பற்றி கேட்டால் இலியானா இப்படி சொல்லிட்டாரே

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருமணம் பற்றிய கேள்விக்கு இலியானா அளித்த பதில்..!!

மும்பை: திருமணம் பற்றி கேட்டதற்கு இலியானா அளித்த பதில் பலரையும் வியக்க வைத்துள்ளது.

டோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலாகியுள்ள இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார்.

இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

கணவர்

கணவர்

கடந்த டிசம்பர் மாதம் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதை எடுத்தது கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்து தான் இலியானாவுக்கும், ஆன்ட்ரூவுக்கும் திருமணமானது தெரிய வந்தது.

இலியானா

இலியானா

அஜய் தேவ்கனின் ரெய்டு இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. பாத்ஷாஹோ படத்தை அடுத்து அஜய், இலியானா மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

பதில்

பதில்

ரெய்டு பட ட்ரெய்லர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலியானாவிடம் உங்களுக்கும் ஆன்ட்ரூவுக்கும் திருமணமாகிவிட்டதா என்று கேட்கப்பட்டது.

முடியாது

முடியாது

திருமணம் நடந்ததா என்று கேட்டதற்கு இலியானா கூறியதாவது, இது குறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. சினிமா வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.

கிசுகிசு

கிசுகிசு

ஆன்ட்ரூவை கணவர் என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுவிட்டு திருமணமாகிவிட்டதா என்று கேட்டதற்கு ஆமாம், இல்லை என்று சொல்லாமல் இந்த இலியானாவுக்கு பகுமானத்தை பாரேன் என்று பாலிவுட்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

English summary
When actress Ileana was asked whether she is married to her Australian photographer boyfriend Andrew Kneebone, she said that there is nothing to comment about it. Earlier she posted a picture of hers on instagram mentioning Kneebone as hubby.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil