»   »  'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா

'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சியில், மருதநாயகம் படத்தின் அறிவிப்பை, பாட்டுப்பாடி இளையராஜா, கமல் இருவரும் அறிவித்தனர்.

கடந்த 27 ம் தேதி இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், பஞ்சு அருணசாலம், கமல்ஹாசன் மற்றும் பாக்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இளையராஜா

இளையராஜா

சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படமாக அமைந்தது. இதன் மூலம் திரையுலகில் 1௦௦௦ படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமை இசைஞானிக்கு கிடைத்தது.

இளையராஜா 1௦௦௦

இளையராஜா 1௦௦௦

இதன் பொருட்டு இசைஞானியைக் கவுரவிக்கும் விதமாக விஜய் டிவி 'இளையராஜா 1௦௦௦' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மனோ, சித்ரா

மனோ, சித்ரா

இந்த விழாவில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாக்யராஜ், பஞ்சு அருணாசலம் ஆகியோரும் இளையராஜா குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.

மருதநாயகம்

மருதநாயகம்

விழாவின் இறுதியில் பேசிய கமல்-இளையராஜா இருவரும், 'மருதநாயகம் படம் மீண்டும் தொடங்கப்படும்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் அந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட 'பொறந்தது பனையூரு மண்ணு' என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினர். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

லைகா

ஏற்கனவே லைகா நிறுவனத்துடன் 2 படங்கள் பண்ணுகிறேன், அவற்றில் மருதநாயகமும் உண்டு என்று கமல்ஹாசன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி-அக்ஷய்குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகும் 2.0 படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

English summary
"My Dream Movie Marudhanayagam will Restart Soon" Kamal Haasan Said in Ilayraja 1000 Event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil