»   »  விஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது' தல-தளபதி ரசிகர்களுக்கான விருந்து

விஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது' தல-தளபதி ரசிகர்களுக்கான விருந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி நடிப்பில் 'மருது 'திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

'கொம்பன்' புகழ் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். வேறு பெரிய படங்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை என்பது மருதுவின் பலத்தை அதிகரித்துள்ளது.


எனினும் தமிழ்நாட்டின் தேர்தல் பரபரப்பை மீறி இப்படம் ரசிகர்களை ஈர்த்தததா? என்பதை இங்கே காணலாம்.


என் பேரன்

படத்தில் விஷால் பாட்டி 'என் பேரன் நெனைச்சா எந்தப் பதவியையும் பிடித்து விடுவான்' என்று கூறுகிறார். நடிகர் சங்கத் தேர்தலை சொல்றாங்களோ?


அஜீத்-விஜய்

படத்தில் அஜீத்-விஜய்-சூர்யா வசனங்களை பயன்படுத்தி இருப்பதை அப்பு சுட்டிக்காட்டியிருக்கிறார்.


புலி

'விஷால் நெஞ்சுல புலி பச்சை குத்தியிருக்காரு' என நட்ராஜ் கூறியிருக்கிறார். புலியா? இல்லை பாயும்புலியா?


விஷால் அரசியலுக்கு

'விஷால் பஞ்ச் பேசறதைப் பார்க்கும்போது அரசியலுக்கு வந்துருவாரோ?' என லேசான பயத்துடன் சரண் பதிவிட்டிருக்கிறார்.


தினக்கூலி

'படத்துல தினக்கூலிக்கு வேலை பாக்கற விஷால் அயன் பண்ண பிராண்ட் சட்டையா போடுறாரு' என விஷாலின் டிரெஸ்சிங் ஸ்டைலில் குறை கண்டுபிடித்திருக்கிறார் ரைஸா.


English summary
Vishal-Sri Divya Starrer 'Marudhu' Movie Released Today Worldwide. Written and Directed by Muthaiah-Live Audience Response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil