»   »  தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது'

தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் விஷாலின் 'மருது' திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மருது'. கிராமத்துப் பின்னணியில் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.


Marudhu Released 400 screens

படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளுக்குப் பின் ராதாரவி-விஷால் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.


இந்நிலையில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியிருக்கிறது. வேறு பெரிய படங்கள் இல்லை என்றாலும் தேர்தல், மழை காரணமாக இப்படத்திற்கான டிக்கெட் பதிவு சற்று மந்தமாகவே உள்ளதாக கூறுகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. 'கதகளி' சுமாராக ஓடிய நிலையில் 'மருது' தனக்கு பிரேக் கொடுக்கும் என விஷால் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.


விஷாலின் நம்பிக்கையை 'மருது' காப்பாற்றுமா?

English summary
Vishal's Marudhu Released more than 400 Screens in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil