»   »  விஷாலின் 'மருது'வில் மகன்களுடன் கலக்கிய சூரி

விஷாலின் 'மருது'வில் மகன்களுடன் கலக்கிய சூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மருது படப்பிடிப்பின் இறுதி நாளில் தன்னுடைய மகன்களுடன் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சூரியாக கவர்ந்த சூரி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.


Marudhu Shooting Wrapped Up

இவர் தற்போது விஷாலின் மருது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஷால், ஸ்ரீதிவ்யா நடித்து வரும் இப்படத்தை 'கொம்பன்' புகழ் முத்தையா இயக்கி வருகிறார்.


ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மருது படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.



நேற்று நடைபெற்ற கடைசி நாள் படப்பிடிப்பில் சூரி தன்னுடைய 2 மகன்களுடன் கலந்து கொண்டு, தான் நடிக்கும் காட்சிகளை பார்க்க வைத்திருக்கிறார்.


விஷால் வில்லன் ஆர்கே.சுரேஷுடன் மோதும் சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழுஅறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Vishal's Marudhu Shooting Wrapped Up Yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil