என்னமா படம் எடுத்திருக்காங்க...ஆர்ஆர்ஆர் படத்தை யார் இப்படி பாராட்டி இருக்காங்க தெரியுமா?
வாஷிங்டன் : இந்த ஆண்டு ரிலீசாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த பான் இந்தியா படம் ஆர்ஆர்ஆர்.
1920 களில் சுதந்திரத்திற்கு முன் வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்டக்காரர்கள் பற்றிய கதை. மார்ச் 24 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டதட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடிகளுக்கும் மேல் வசுல் செய்தது.
தெலுங்கில் எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. நட்பு, காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் உள்ளிட்டவைகள் உள்ளடக்கியதாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த ஆர்ஆர்ஆர்
இந்த படம் சமீபத்தில் ஜீ 5, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது. தியேட்டர்களில் மட்டுமின்றி ஓடிடி.,யிலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து, பாராட்டையும் பெற்றுள்ளது. படம் ரிலீசாகி 4 மாதங்கள் ஆகியும் தற்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அட இவரே பாராட்டிருக்காரா
அமெரிக்காவிலும் வசுலை மட்டுமின்றி பாராட்டையும் ஆர்ஆர்ஆர் படம் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அப்படி லேட்டஸ்டாக இந்த படத்தை பாராட்டியவர் எழுத்தாளர் Jon Spainhts.

இவர் யாருன்னு தெரியுதா
உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற மார்வெல்ஸ் படைப்பின் டாக்டர் ஸ்டிரேன்ஜ், டுன், பேசன்ஜர்ஸ் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய Jon Spainhts தான் இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

என்னால மறக்க முடியல
அவர் தனது ட்விட்டர் பதிவில்,புனித சொர்க்கம் ஆர்ஆர்ஆர். அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இதை விட ஒரு படத்தை பார்க்க முடியாது. என்ன ஒரு கதையோட்டம். இரண்டு நாட்களாகியும் இப்போது வரை அதை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஆர்ஆர்ஆர்.,க்கு ஆஸ்கர் கிடைக்குமா
இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். எனது ஃபேவரைட் டுன் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் அவரை இதை பாராட்டி உள்ளார். மற்றொரு ரசிகர்கள், ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என நினைக்கிறீர்களா என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











