»   »  'ஏ' கவுரவ்.. 'பி' சிவா.. 'சி' சிம்ஹா... இதுதாங்க மசாலா படம்!

'ஏ' கவுரவ்.. 'பி' சிவா.. 'சி' சிம்ஹா... இதுதாங்க மசாலா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவா, பாபி சிம்ஹா, கவுரவ் ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மசாலா படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய முயற்சி இதற்காகவே மசாலா படத்தை ஆதரிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

200 க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கும் மசாலா படம் ரசிகர்களைக் கவர்ந்ததா என்று பார்க்கலாம்.

மசாலா படம்

மசாலா படம்

தமிழில் படம் வெளியானால் அதன் ஏரியாவைப் பொறுத்து ஏ,பி,சி சென்டர்கள் என தரம் பிரிப்பார்கள். அதே போல இந்தக் கதையில் கவுரவ் ஏ கிளாஸ், சிவா பி கிளாஸ் மற்றும் சினிமா ரசிகராக வரும் பாபி சிம்ஹா சி கிளாஸ் என்று தனித்தனி வேடங்களில் வெரைட்டி காட்டியிருக்கின்றனர். மூன்று பேரும் ஏ,பி,சி செண்டர் ரசிகர்களாக மசாலா படத்தில் நடித்திருக்கின்றனர். படம் முழுக்க முழுக்க ஆன்லைன் விமர்சகர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை டார்கெட் செய்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் லக்ஸ்மன் குமார்.

வழக்கமான திரைக்கதையை

"தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதையை உடைத்திருக்கிறது மசாலா படம்" என்று சங்கர் கணேஷ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மீம்ஸ் கிரியேட்டர்கள்

"படத்தின் ஒரு பகுதி முழுவதுமே ஆன்லைனில் மீம்ஸ் கிரியேட் செய்பவர்களையும், படங்களை கிண்டல் செய்பவர்களையும் குறிவைத்திருக்கிறது" ரிசா நஸ்ரின்.

ஆன்லைன் விமர்சகர்கள்

"மசாலா படம் ஆன்லைன் விமர்சகர்களையும் விட்டு வைக்கவில்லை, இந்தப் படத்திற்கு விமர்சனம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்" ஹரி சுதன்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா

"வாழ்க்கை ஒரு வட்டம் டா என் தளபதி சொன்னது" என்று மசாலா படத்தில் வரும் வசனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார் கல்லிடைகரன்.

இவ்வாறு மேலும் பலரும் படத்திற்கு நல்ல கருத்துக்களை வழங்கி வருகின்றனர், பாக்ஸ் ஆபிசிலும் இவை எதிரொலிக்கின்றதா என்று பார்க்கலாம்.

English summary
Bobby Simha, Shiva and Gaurav starrer Masala Padam hit screens on Today,The movie is written and directed by Laxman Kumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil