»   »  பேய்ப் பட ட்ரெண்டைப் பிடித்த சூர்யா - வெங்கட் பிரபு!

பேய்ப் பட ட்ரெண்டைப் பிடித்த சூர்யா - வெங்கட் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கமான தனது ஜாலி பாணியிலிருந்து டெரர் பாணிக்கு மாறியுள்ளார் வெங்கட் பிரபு. ஒரு அதிரடி வெற்றி வேண்டும் என்பதால் சூர்யாவும் இப்போதுள்ள பேய்ப் பட ட்ரெண்டுக்கு மாறியிருக்கிறார் சூர்யாவும்.

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி நடித்துள்ள இந்தப் படம் மே 29ல் வெளியாகவிருக்கிறது.


படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சூர்யா கூறுகையில், "இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்காத படம் தான் மாஸ்.


அதென்ன “மாஸ்”?

அதென்ன “மாஸ்”?

வேற ஒண்ணுமில்லீங்க.. இந்தப்படத்துல என் பெயர் மாசிலாமணி, என்ன எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.


பேய்ப் படம்தான்

பேய்ப் படம்தான்

அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமா, எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரிதான் இருக்கும்.
வெங்கட் பிரபு டீம் எப்படி?

வெங்கட் பிரபு டீம் எப்படி?

வெங்கட் பிரபு டீம் மாதிரியே நானும் ஜாலியான பையன். வெங்கட் பிரபு டீமே ஷூட்டிங் டைம்ல ஜாலியாதான் இருந்தாங்க. எனக்கே டவுட் ஆயிடுச்சி. உண்மையிலுமே ஷூட்டிங் தான் போகுதானு டவுட் ஆயிடுச்சி. அதுக்காகவே கேரவேன்ல இருக்காம ஷூட்டிங் ஸ்பாட்லையே உக்காந்து என்ன நடக்குதுன்னு பார்த்திட்டு இருப்பேன்," என்றார்.


வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், "இந்த மாஸ் சூர்யாவுக்கு பெரிய மாஸ் படமாக இருக்கும். வருகிற 29-ந் தேதி தமிழ்-தெலுங்கு என இருமொழிகளிலும் படத்தை வெளியிடவுள்ளோம்," என்றார்.


English summary
Surya says Mass is a different horror movie and people would like it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil