இன்னும் அது மட்டும் தான் பாக்கி.. இந்த ஆண்டே வெளியாக அசுர வேகத்தில் ரெடியாகும் ராஜமெளலி படம்!

சென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

மகதீரா படத்திற்கு பிறகு மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் இணைந்துள்ள இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி, ஹாலிவுட் நடிகர்கள் என ஒரு பவர் ஹவுஸ் ஃபேக்டரியே பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், வெகு விரைவாக இந்த படம் வெளியாகும் என்கிற தகவல் தற்போது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராஜமெளலி

ராஜமெளலி

நான் ஈ, மகதீரா, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் என ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவை மட்டுமின்றி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் RRR.

சுதந்திர போராட்டம்

சுதந்திர போராட்டம்

ஆங்கிலேயரின் அடிமைத் தனத்திற்கு எதிராக ஆந்திராவில் இருந்து வெகுண்டு எழுந்த அல்லுரி சீதாராமராஜுவின் சுதந்திர போராட்ட கதையை மையமாக வைத்துத் தான் இந்த பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சீதாராமராஜுவாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.

மாஸ் ஹீரோக்கள்

மாஸ் ஹீரோக்கள்

டோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நம்ம ஊர் சமுத்திரகனியும் சிறப்பான ரோலில் நடித்துள்ளார்.

2 பாட்டு தான் பாக்கி

2 பாட்டு தான் பாக்கி

இந்நிலையில், தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக RRR படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்றையும் அதிரடி அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அசுர வேகத்தில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

டப்பிங் நிறைவு

டப்பிங் நிறைவு

மேலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டனவாம். விரைவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருவதால், இந்த ஆண்டே ஆர்.ஆர்.ஆர் படம் திரைக்களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸ்

ஏற்கனவே படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே தேதியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் ராஜமெளலியின் படம் கலந்து கொள்வது உறுதி என தெரிகிறது. அஜித்தின் வலிமை மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X