Don't Miss!
- Technology
பேரு Fastrack நியாபகம் இருக்கா? வெறும் ரூ.1495க்கு அறிமுகமான அட்டகாச ஸ்மார்ட்வாட்ச்: உச்சக்கட்ட சம்பவம்!
- News
"என் மனசில ஒன்னு இருக்கு".. ஆஹா, கார்த்தி சிதம்பரம் விடமாட்டார் போல.. யாரந்த "லீடர்".. நீளும் லிஸ்ட்
- Automobiles
இந்த சர்க்கஸ் பயணம் தேவையா...? பெங்களூர் டிராஃபிக்கை பற்றி தெரியாது போல!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
- Sports
உலகக்கோப்பையில் அஸ்வின் கேட்ட மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவுக்குரல்.. நிறைவேற்றுமா ஐசிசி!
- Finance
30% சம்பள உயர்வு.. 2023ல் சர்ப்ரைஸ்.. ஆசியாவிலேயே இந்தியா தான் டாப்பு..
- Lifestyle
தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தியடைவதால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 7 ராசிக்கு எதிலும் வெற்றி தான்!
- Travel
ஜெனரல் டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யலாம் – இப்படி செய்தால் போதும்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
புதிய கார் வாங்கிய பூவையார்.. வெறும் 14 வயதிலேயே மாஸ் காட்டிய மாஸ்டர் நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பூவையார் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பிகில் படத்தில் வெறித்தனம் பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து நடனமாடிய பூவையார், மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார்.
இந்நிலையில், 14 வயதாகும் பூவையார் சொந்தமாக கார் வாங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதர்வாவுக்கு
ஜூனியர்
கேப்டன்
என்று
பெயரிட்ட
சின்னி
ஜெயந்த்..
ஏன்
தெரியுமா!

சூப்பர் சிங்கர்
பூவையார் எனும் கப்பீஸ் விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி அசத்தினார். பூவையார் ஸ்டேஜில் பாட்டுப் பாடும் போது செய்யும் பர்ஃபார்மன்ஸ்கள் ரசிகர்களை மட்டுமல்ல நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தது.

விஜய்க்கு பிடித்த நடிகர்
பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையிலேயே பூவையாரை பாட வைக்க பரிந்துரை செய்தார் நடிகர் விஜய். அந்த அளவுக்கு அவருக்கு பூவையாரின் குரல் மற்றும் ஆக்டிவிட்டிகள் பிடிக்குமாம். "அய்யய்யோ யாராண்ட" என பூவையார் பிகில் படத்தில் ஆரம்பிக்க நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலை பாடி ஆடியிருப்பார் விஜய்.

மாஸ்டர் உண்டியல்
பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் உண்டியல் எனும் கதாபாத்திரத்தில் சிறுவர் சீர்த்திருந்த பள்ளியில் இருக்கும் மாணவராக நடித்திருப்பார் பூவையார். அந்த படத்திற்கு பிறகு அவரது ரேஞ்சே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

புதிய கார்
இந்நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கி உள்ள பூவையார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களை பதிவிட ரசிகர்களும் பிரபலங்களும் பூவையாருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். சாதாரண பின்னணியில் இருந்து வந்து சினிமாவில் சாதித்து 14 வயதிலேயே சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு பூவையார் முன்னேறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மக்களுக்கு நன்றி
"மக்களே எங்களோட புதிய கார். நீங்கள் இல்லயே நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும். அனைவருக்கும் நன்றி. இறைவனுக்கும் நன்றி. எல்லா புகழும் ஆண்டவனுக்கு" எனக் குறிப்பிட்டு பூவையார் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.