Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த டான்ஸ்.. அதுவும் சாந்தனுவை ஒத்திப் போகச் சொல்லி விட்டு.. சூப்பர் விஜய்!
சென்னை : மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், யாரும் எதிர்பாராத நேரத்தில் டான்ஸ் ஆடி அசத்தினார் விஜய்.
Recommended Video
தளபதி ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒவ்வொரு விதமான ட்ரீட்டை ரசிகர்களுக்கு கொடுப்பார். இதனாலே விஜய் மேடை ஏறியதும் அரங்கமே அதிரும். எந்த மேடையும் தராத ட்ரீட்டை கொடுத்து அசத்தி இருக்கிறார் தளபதி விஜய் .

அனிரூத் மற்றும் சாந்தனுவுடன் மேடையேறிய விஜய் வாத்தி கம்மிங் பாடலில் வரும் அசத்தலான இசைக்கேற்ப சட்டென்று ஆட துவங்கினார். இதை பார்த்து உற்சாகமாகிய சாந்தனு விஜயுடன் ஆட துவங்கினார். விஜய் முதல் ஸ்டெப் ஆடியதும், விஜய் அருகில் நின்றிருந்த அனிரூத், ஆட முடியமால் அப்படியே நின்ற படி விஜயை பார்த்து உற்சாகப்படுத்த துவங்கினார். ஆடிய பின் சாந்தனு மற்றும் அனிரூத்தை கட்டி அனைத்து மேடையில் பேச துவங்கினார் விஜய்.
இந்த தளபதியின் ஆடல் தான் மொத்த இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு விஜய் ஆடிய ஆடலை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

மேடைகளில் பெரிதும் ஆடாத விஜய் பல வருடங்கள் கழித்து தற்போது தான் ஆடியிருக்கிறார். விஜய் கடைசியாக போக்கிரி படத்தின் வெற்றி விழாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் ஆடியது குறிப்பிடதக்கது அதன் பின் நீண்ட வருடங்கள் கழித்து தற்போது தான் விஜய் மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகபடுத்தியிருக்கிறார்.
ரசிகர்கள் மொத்த பேரும் கூடியிருந்ததே இந்த பொழுதிற்கு என்பது போல விஜயை உற்சாகமாக வரவேற்றனர். மேடையில் பேசிய விஜய் வாழ்க்கை நதி மாதிரி நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க, கல் எறிவார்கள் ஆனால் நதி எப்படி ஓடிட்டெ இருக்கோ, அதே மாதிரி கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும் என்று அழகாக தெளிவாக எப்போதும் போல் தனது ரைமிங் பேச்சில் அசத்தினார் .

இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையாக நடந்தது எப்போதும் பெரிய அளவில் நடத்தப்படும் விஜயின் இசை வெளியீட்டு விழா இந்த முறை சின்ன இடத்தில் சிறிய அளவு ரசிகர் கூட்டத்துடனே நடைப்பெற்றது இருந்தும் எப்போதும் குறையாத அந்த விஜய் படத்திற்கென்ற அந்த பரபரப்பும் அந்த கொண்டாட்டமும் எந்த அளவிலும் குறைய வில்லை என்பதே உண்மை.