Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விரைவில் மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 ஆரம்பம் ... புதிய பிரமோ வெளியீடு
சென்னை : மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் முதல் பாகம் நடந்து முடிந்துள்ளது.
இதில் டைட்டில் வின்னரை தேர்ந்தெடுத்து சிறப்பான வகையில் சீசனை முடித்தது சன் டிவி.
நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனை சிறப்பான வகையில் முடித்திருந்தார்.

மாஸ்டர் செப் தமிழ்
சன் டிவியில் மாஸ்டர் செப் தமிழ் நிகழ்ச்சி சிறப்பான வகையில் நடந்தது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது திறமையை சிறப்பான வகையில் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டியாளர்களை பார்க்க முடிந்தது. நாக்கை நாட்டியமாட செய்யும் வகையில் வித்தியாசமான ரெசிபிகளையும் பார்க்க முடிந்தது.

சிறப்பான நிகழ்ச்சி
வார இறுதி நாட்களில் ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தான் செய்யும் எந்த விஷயத்தையும் சிறப்பாக செய்பவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி அவருக்கு சிறப்பாகவே அமைந்தது.

வித்தியாசமான ரெசிபிகள்
ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் வித்தியாசமான ரெசிபிக்களை கொடுத்து பார்வையாளர்களில் குஷியாக வைத்திருந்தனர் போட்டியாளர்கள். அவர்கள் செய்து அசத்திய உணவுகளைப் பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

சிறப்பான தொகுப்பு
நடிகர் விஜய் சேதுபதியும் சளைத்தவர் இல்லை. ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் நிகழ்ச்சியை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

முதல் சீசன் நிறைவு
டைட்டில் வின்னர் உடன் சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 விரைவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீசன் 2வின் பரிசு தொகை
இந்த சீசன் 2வின் பரிசுத் தொகையாக 25 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய பிரமோவை சன்டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய பிரமோ
இதில் யாரும் இல்லாத மாஸ்டர் செப் தமிழ் அரங்கத்தில் குட்மார்னிங் சொல்லியபடி நுழைகிறார் விஜய்சேதுபதி. பின்பு டேபிளை தட்டுகிறார். யாரும் இல்லாதது அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

போட்டியாளர்களுக்கான தேடல்
இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தற்போது கிச்சன் காலியாக இருப்பதாகவும் போட்டியாளர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பரிசு
இந்த சீசன் 2 நிகழ்ச்சியின் பரிசுத்தொகை 25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.