»   »  மஸ்திஜாதே படத்தில் கோவிலுக்குள் ஆணுறை விளம்பரம்: சன்னி லியோன் மீது போலீசில் புகார்

மஸ்திஜாதே படத்தில் கோவிலுக்குள் ஆணுறை விளம்பரம்: சன்னி லியோன் மீது போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மஸ்திஜாதே படத்தில் கோவிலுக்குள் வைத்து ஆணுறை விளம்பரம் செய்ததாகக் கூறி நடிகை சன்னி லியோன், நடிகர் வீர் தாஸ் மீது வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மிலாப் ஜாவேரி இயக்கத்தில் சன்னி லியோன், துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்ஸ் காமெடி படம் மஸ்திஜாதே. படம் முழுக்க ஆபாசம் அதிகம் இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு முதலில் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது.

சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்க மறுத்ததும் மஸ்திஜாதே பலரின் கவனத்தை ஈர்த்தது.

சான்றிதழ்

சான்றிதழ்

படக்குழுவினர் பல மாதங்களாக போராடி ஒரு வகையாக சென்சார் போர்டிடம் இருந்து சான்றிதழ் பெற்று படத்தை ரிலீஸ் செய்தனர்.

சன்னி

சன்னி

நடிப்பில் சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் போட்டுள்ள சன்னி இந்த படத்திலும் கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். படம் முழுக்க கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சி தான்.

வழக்கு

வழக்கு

படத்தில் வரும் காட்சி ஒன்றில் சன்னியும், வீர் தாஸும் கோவிலுக்குள் நின்று கொண்டு ஆபாசமாக ஆணுறை விளம்பரம் செய்துள்ளனர் என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி போலீசில் புகார் அளி்ததுள்ளார்.

சல்மான், ஷாருக்

சல்மான், ஷாருக்

பிக் பாஸ் 9 டிவி ரியாலிட்டி ஷோவில் கோவில் செட்டில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஷூ அணிந்து அவமரியாதை செய்துவிட்டதாக புகார் கொடுத்த அதே கவ்ரவ் தான் சன்னிக்கு எதிராகவும் புகார் அளித்துள்ளார்.

English summary
A complaint has been registered in Delhi againt Mastizaade crew including Sunny Leone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil