For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வச்ச குறி தப்பாது.. மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் இணைந்தார் பிரியங்கா.. அதுவும் என்ன ரோல் தெரியுமா?

  |

  மும்பை: மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க பிரியங்கா முயற்சி செய்து வருவதாக, லாக்டவுனுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது, அந்த படத்தில் அதிகாரப்பூர்வமாக இடம் பிடித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

  ஹாலிவுட்டின் பிரபல நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் இதுவரை வெளியான மேட்ரிக்ஸ் படத்தின் 3 பாகங்களும் உலகளவில் வசூலை வாரி குவித்து வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்த படத்தின் 4ம் பாகம் உருவாகி வருகிறது.

  லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புடன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.

  அமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் !அமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் !

  கோலிவுட் டு ஹாலிவுட்

  கோலிவுட் டு ஹாலிவுட்

  கோலிவுட்டில் தளபதி விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் நடிகர் கீனு ரீவ்ஸுடன் இணைந்து நடிக்க உள்ளார். முன்னதாக ராக் என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜாக்சனின் பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்து பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் நடிகையாக மாறி விட்டார்.

  20 வருஷம்

  20 வருஷம்

  சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா, சினிமா துறையில் கால்பதித்து 20 வருடங்கள் ஆனதை, அவரது ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் ஹாஷ்டேக்குகள் போட்டும், அவரை பாராட்டி, மாஷ் அப் வீடியோக்களை வெளியிட்டும் பிரியங்கா சோப்ராவை வெகுவாக பாராட்டி இருந்தனர். 20 வருடங்களாக தன்னை ரசித்து பார்த்து, இந்த இடத்துக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து இருந்தார்.

  இளம் வயது கணவர்

  இளம் வயது கணவர்

  வரும் ஜூலை 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 11 வருடங்கள் இளையவரான அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் பிரியங்கா தொடர்ந்து ஹாலிவுட் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

  மேட்ரிக்ஸ் டிரைலஜி

  மேட்ரிக்ஸ் டிரைலஜி

  1999ம் ஆண்டு லானா வச்சோஸ்கி மற்றும் லில்லி வச்சோஸ்கி இயக்கத்தில் வெளியான சை-ஃபை ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மேட்ரிக்ஸ். ஹேக்கிங், கம்ப்யூட்டர் கோட், ஓரிடத்தில் உடலை வைத்துக் கொண்டு, மற்றொரு இடத்தில் ஆன்மாவுடன் சண்டை இடுதல் என எதிர்கால டெக்னாலஜி பலவற்றுக்கும் அஸ்திவாரம் போட்ட அந்த படம் இதுவரை மூன்று பாகங்களாக ரிலீஸ் ஆகியுள்ளன.

  கீனு ரீவ்ஸ்

  கீனு ரீவ்ஸ்

  டிராகுலா, ஸ்பீட், மேட்ரிக்ஸ், கான்ஸ்டான்டைன், பாயின்ட் பிரேக், ஜான் விக், நாக் நாக் என உலகளவில் பல கோடி ரசிகர்களை கவர்ந்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த ஹாலிவுட்டின் முன்னணி நாயகன் கீனு ரீவ்ஸ். 54 வயதாகும், கீனு ரீவ்ஸ், மீண்டும் தனது மெகா ஹிட் படமான தி மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

  மேட்ரிக்ஸ் 4

  மேட்ரிக்ஸ் 4

  மேட்ரிக்ஸ் 4ம் பாகத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை பிரியங்கா சோப்ரா ஆடிஷன் சென்றிருந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது அந்த படத்தில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். லானா வச்சோஸ்கி இயக்கவுள்ள இந்த படத்தில், நாயகி ஆன்னே மோஸ், யாயா அப்துல் மட்டீன் மற்றும் நீல் பட்ரிக் ஹாரிஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

  தொடங்கிய ஷூட்டிங்

  தொடங்கிய ஷூட்டிங்

  பெர்லினில் லாக்டவுன் தளர்வுகள் அமலாகி உள்ள நிலையில், அங்கு இந்த படத்தின் ஷூட்டிங்கை வார்னர் பிராஸ் மற்றும் ரோட் ஷோ பிக்சர்ஸ் தயாரிப்பு தரப்பு தொடங்கி இருப்பதாகவும், நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் கீனு ரீவ்ஸுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், பிரியங்காவின் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Priyanka Chopra has reportedly joined the cast of much awaited Hollywood film Matrix 4 along side with Hollywood superstar Keanu Reeves.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X