»   »  கவர்ச்சி மாயாவுக்கு குண்டாஸ்?

கவர்ச்சி மாயாவுக்கு குண்டாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் கவர்ச்சி நடிகை மாயாவைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே தள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா. இப்போது அவர் சினிமாவில் நடிப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் ஈடுபடுவது மாயாவின் வழக்கமாகி விட்டது.

இவரது வீடு வடபழனியில் உள்ளது. இவருக்கு விக்கி என்கிற மகன் உள்ளார். இவரது அக்கா மகள்தான் கவர்ச்சி நடிகை பாபிலோனா. இவர் நடிப்போடு, வாட்டர் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு மாயா குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள சக குடித்தனக்காரர்களிடம் பெரும் ரகளையில் ஈடுபட்டார். அவரும், அவரது மகனும் சேர்ந்து குடிநீர்க் குழாய்களை உடைத்து அட்டகாசம் செய்தனர்.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் இருவரும் வெளியே வந்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் மாயா ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு போதெல்லாம் மாயா விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் மாயாவின் மகன் விக்கி சமீபத்தில் குடித்து விட்டு பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கியதாக ஒரு வழக்கில் சிக்கினார். இதில் அவரைக் கைது செய்ய போலீஸார் தலைமறைவாகி விட்ட விக்கியைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாயா மீதான பிடிவாரண்ட்டைப் பயன்படுத்தி அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல அவரது மகனையும் குண்டாஸில் போட போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

மாயா சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். போலீஸார் தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதை அறிந்த அவர் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்டார். அவர் வெளிநாடு போயுள்ளதாக அவரது உறவினர்கள் கூறுகிறார்களாம்.

ஆனால் அவர் சென்னையில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகிறார்கள். இதுவரை அவருக்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அவருக்கு ஆதரவாக இருந்த சில அரசியல்வாதிகளும் தற்போது ஜகா வாங்கி விட்டனராம்.

இதனால் தெம்பாகியுள்ள போலீஸார் மாயாவையும், அவரது மகனையும் பிடித்துப் போட படு தீவிரமாக தேடி வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil