»   »  பிரேமம் ஸ்ருதியை நயன்தாரா பட இயக்குனரும் இப்படி ஓட்டுறாரே!

பிரேமம் ஸ்ருதியை நயன்தாரா பட இயக்குனரும் இப்படி ஓட்டுறாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் வரும் ஸ்ருதியை ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில் மாயா பட இயக்குனரும் கிண்டல் செய்துள்ளார்.

மலையாள படமாக இருந்தாலும் பிரேமம் தமிழ் ரசிகர்களின் மனதில் ராஜ நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டது. அதிலும் குறிப்பாக மலர் டீச்சர் தான் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

Maya director too trolls Shruti Haasan

இப்படி ரசிகர்கள் மலர் டீச்சரை மறக்க முடியாமல் இருக்கும்போது பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. அதில் மலர் டீச்சராக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ளார்.

ரசிகர்களோ மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியோடு ஸ்ருதி ஹாஸனை ஒப்பிடுகிறார்கள். சாய் பல்லவி பக்கத்தில் கூட ஸ்ருதி வர முடியாது என்று சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஷ்வின் சரவணனும் ஸ்ருதியை கிண்டல் செய்வது போன்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

தெலுங்கு பிரேமம் வீடியோ பாடலின் கமெண்ட் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதுவே அனைத்தையும் தெரிவிக்கிறது, இல்லையா? அடுத்து ரேட்டிங் பார் என்று தெரிவித்துள்ளார்.

English summary
As fans are busy trolling Telugu Premam Shruti Haasan, Maya director too joins them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil