»   »  உலக அளவில் அங்கீகாரம் பெற்ற நயன்தாராவின் பேய்ப் படம்!

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற நயன்தாராவின் பேய்ப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா நடித்துள்ள பேய்ப் படமான மாயா ட்ரெய்லர் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்துள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் மாயா.

நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசை ரோன் ஏதன் யோகன்.

Maya gets international recognition, says debutant director

படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் பேசும் போது, "நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை அதற்கு காரணம், யாரையாவது நினைத்து நான் கதை எழுதி அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த சிங்கள் மதர் கதாபாத்திரத்தில் நன்கு தெரிந்த முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார். உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே தயாரிப்பாளர் நயன்தாராவிடம் பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார். நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

Maya gets international recognition, says debutant director

இந்தக் கதையைப் படமாக்க மொத்த குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை செய்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் ஆரி அவர்கள் ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான பத்ரிக்கைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும். இந்த படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லல் இருக்கும். இந்த படத்தின் சவுண்ட் டிசைன் பெரிய அளவில் பேசப்படும். நயன்தாராவுக்கு இந்த படத்துக்கு ஏற்றவாறு மேகப் போடப்பட்டுள்ளது.

முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் ஆங்கிகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்," என்றார்.

படத்தை பற்றி நடிகர் ஆரி பேசுகையில், "இந்தhd படத்தில் முதலில் நடிகர் நானி நடிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன்," என்றார்.

நான் இதுவரை வெளியிட்ட பேய்ப் படங்களிலேயே பெஸ்ட் இந்த மாயாதான் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nayanthara's horror film Maya director says that the trailer of the movie has got international attention.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil