twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் !

    |

    சென்னை : மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட். பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் இந்திய குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க பாரிஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யானிக் பென் மற்றும் மாயா இருவரும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள்.

    சண்டைக் காட்சிகளில் மாயாவின் திறமைகளைக் கண்டு வியந்த யானிக், அவரது முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் ஒரு குறும்படத்தை உருவாக்கி உள்ளார்.

    சூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது!சூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது!

    முதலில் நன்றி

    முதலில் நன்றி

    மாயா அன்லீஷ்ட்' படத்தின் முன்னோட்டத்தில் "மாயாவின் திறமைகளை நான் தான் முதலில் கண்டு பிடித்தேன் என்று பெருமை பொங்கத் தெரிவித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்தப் படைப்பின் பின்னணியில் இருந்து என்னை ஊக்கப்படுத்திய கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்குத்தான் என் முதல் நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்த மாயா.

    விட முயற்சி

    விட முயற்சி

    "ஒழுக்கமான பயிற்சி, கடினமான உழைப்பு மற்றும் ஒட்டு மொத்த குழுவும் என் மீதி வைத்திருந்த நம்பிக்கை ஆகியன இல்லாவிட்டால் இது சாத்தியப் பட்டிருக்காது. குறிப்பாக இந்த வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று என் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்த யானிக் பென்னுக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    முழு நீள திரைப்படம்

    முழு நீள திரைப்படம்

    பிரத்யேகமான இரண்டு வார தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த குறும்படத்தை முழு நீள திரைப்படமாகத் தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது. சரியான ஆதரவு கிடைக்கும் போது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று மாயா தெரிவித்தார்.

    குருநாதர்கள்

    குருநாதர்கள்

    கலை மீதான அர்பணிப்புடன் கூடிய ஈடுபாடு குறிப்பாக நடிப்பின் மீது கொண்ட வேட்கை, ஏராளமான இதயங்களை மாயாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. நகைச்சுவையை மேம்படுத்துதல், கதை சொல்லல் என பல்வேறு கலை தொடர்பானவற்றில் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார் மாயா. இமா சாவித்ரி, வீணா பாணி, கெளமாறன், ஆரியன் மற்றும் ராஜிவ் கிருஷ்ணன் ஆகிய குருநாதர்களிடம் கற்றுத் தேர்ந்த மாயா, தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பதும், கடினமான பயிற்சிகளை செய்வதுமாகவே இருக்கிறார்.

    நிறைய எதிர்பார்ப்பு

    நிறைய எதிர்பார்ப்பு

    யானிக் பென்னைப் பொறுத்தவரை அமேசான் பிரைம் சீரியஸின் தி பேமிலி மேன், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஃப்யுரி, ஆகியவற்றைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா-இமைபோல் காக்க ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். மார்க் டேவிட் ஆக்ஷன் டிசைன், திரு.ஜி.ரத்தினவேலு, மற்றும் ஒயில்ட் வோர்ல்ட் ஸ்டண்ட் டீம் ஒன்றிணைந்து இக்குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது. நிறைய எதிர்பார்ப்பது கொண்ட படமாகவும் பேசபடுகிறது. இந்த படத்திற்காக நிறைய ப்ரமோஷன்ஸ் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தை தன் பங்குக்கு ப்ரமோட் செய்து வருகிறார்.

    English summary
    Maya unleashed - India's First female action short film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X