twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பிரபல தியேட்டர்ல கைதி படத்துக்கு 10வது இடம் தானாம்.. முதல் இடத்துல எந்த படம் தெரியுமா?

    |

    சென்னை: மாயாஜால் திரையரங்கில் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களில் ரஜினியின் பேட்ட முதலிடத்திலும், கார்த்தியின் கைதி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

    சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் மொத்தம் 16 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன.

    இந்த ஆண்டு பொங்கலுக்கு விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட படங்கள் மோதின. இரு படங்களும் 100 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் வசூலை ஈட்டின.

    பிரபல திரையரங்குகள் தங்களின் தியேட்டர்களில் இந்த ஆண்டு அதிக கலெக்‌ஷன் கொடுத்த படங்களின் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், மாயாஜால் திரையரங்கம் தனது டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

    சிவனின் அழகான பார்வதி.. 'பிந்து மாதவி' மாயனின் புதிய போஸ்ட்சிவனின் அழகான பார்வதி.. 'பிந்து மாதவி' மாயனின் புதிய போஸ்ட்

    10. கைதி

    10. கைதி

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படம் வசூல் ரீதியாக மாயாஜால் திரையரங்கில் 10வது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இந்த படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

    9. காஞ்சனா 3

    9. காஞ்சனா 3

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா, ஓவியா, டம்போலி என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். உலகளவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

    8. அசுரன்

    8. அசுரன்

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டின் சிறந்த படமாக வெளியான அசுரன் திரைப்படம் மாயாஜால் பாக்ஸ் ஆஃபிஸில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு 100 கோடி பட்டியலில் அசுரன் படமும் இடம்பெற்றுள்ளது.

    7. தி லயன் கிங்

    7. தி லயன் கிங்

    மாயாஜால் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் அனைத்து மொழி படங்களிலும் அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலே வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படமான தி லயன் கிங் படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.

    6. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

    6. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

    உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை பெற்று 25 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் அதிகளவில் வசூல் செய்யவில்லை. அதற்கு சொதப்பலான டப்பிங் ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    5. கோமாளி

    5. கோமாளி

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சிறந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமான கோமாளி படமும் மாயாஜால் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்‌ஷனை பெற்றுள்ளது.

    4. நேர்கொண்ட பார்வை

    4. நேர்கொண்ட பார்வை

    போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் மாயாஜால் திரையரங்கில் நல்ல வசூல் ஈட்டியுள்ளது.

    3. விஸ்வாசம்

    3. விஸ்வாசம்

    நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் இந்த பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ளது. தல அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் விஸ்வாசம் திகழ்கிறது.

    2. பிகில்

    2. பிகில்

    தளபதி விஜய்யின் பிகில் இந்த ஆண்டு உலகளவில் 300 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை பெற்றுள்ளது. ஆனாலும், சென்னை மாயாஜாலில் அட்லி இயக்கத்தில் வெளியான விஜய்யின் பிகில் படத்திற்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது.

    1.பேட்ட

    இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாருடா சும்மா கிழி.. என தர்பார் பட பாடலில் வரும் வரிகள் போல, இந்த ஆண்டு வெளியான பல மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு மத்தியிலும் சூப்பர்ஸ்டாரின் பேட்ட திரைப்படம் அதிக வசூலை மாயாஜால் திரையரங்கில் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    English summary
    Chennai’s one of the biggest multiplex theater Mayajaal theater reveals the top 10 box office movies of 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X