TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!
உடலால் மறைந்தாலும் தனது வள்ளல்தன்மையால், கருணை மனதால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் அமரர் எம்ஜிஆர்.
அவரது வழியை இன்றும் பின்பற்றி பலருக்கும் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களைப் பார்க்க முடியும்.
நடிகர் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் அபிமானி.. அதை விட பக்தர் என்று சொல்வதே சாலப் பொருந்தும். தன் நிலைமைக்கேற்ப உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.

நேற்று நடந்த, மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் சொகுசுப் பேருந்து பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி, பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதை செயலால் காட்டினார்.
அவரை பேச அழைத்தபோது, "பேச்சைக் குறை.., முடிஞ்ச உதவியை முதலில் செய்.. நான் தெய்வமாக வணங்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கற்றுத் தந்தது இது. அந்த வகையில் ராசு மதுரவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வது, அறிவுரை சொல்வதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில் அவர் குடும்பத்துக்கு அவரவரால் என்ன உதவி செய்ய முடியுமோ.. அதை இப்போதே செய்யுங்கள். அதுதான் இப்போது அனைவரும் செய்ய வேண்டிய விஷயம்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரால்.. இதோ என்னால் ஆன தொகை ரூ 20000 ஆயிரத்தை அளிக்கிறேன்," என்று கூறிய மயில்சாமி, மேடையிலேயே அந்தப் பணத்தை ரொக்கமாக ஆர்கே செல்வமணியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
ஒருவர் மறைந்தாலும் அவரது குணங்கள் அவரைச் சார்ந்து இயங்குபவர்களிடம் இருந்தால், அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே அர்த்தம் என்பார்கள். எம்ஜிஆர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்!