twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைத்தட்டல் வாங்குவதற்காக வாயில் வந்ததைப் பேசினால் இப்படித்தான் மயில்சாமி மாதிரி சிக்கி முழிக்கனும்!

    By Mayura Akilan
    |

    சென்னை: மேடையில் எதையாவது பேசி கைத்தட்டல் வாங்குவோருக்கு மயில்சாமிக்கு வந்த சிக்கல் ஒரு சரியான பாடம். காமெடிக்காக எதையோ பேசப் போய் இப்போது பெரும் சிக்கலுக்குள்ளாகி மீண்டுள்ளார் நடிகர் மயில்சாமி.

    குரங்குகளுக்கு மது ஊற்றிக்கொடுத்ததாக விழாவில் பேசியதற்கு நடிகர் மயில்சாமியை, கால்நடை துயர்தடுப்பு அதிகாரிகள் வீடு தேடிப் போய் என்ன செஞ்சீங்க என்று விசாரிக்கப் போக அரண்டுபோய் விட்டாராம் மயில்சாமி. கடைசியில் தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டு எழுதிக் கொடுத்து தப்பியுள்ளார்.

    கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘வஜ்ரம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசினார். அப்போது அவர், "குற்றாலத்தில் நடந்த படப்பிடிப்பின்போது சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலமாக மது கொடுத்தேன். அதை குடித்த குரங்குகள் மரம் ஏறுவதை கூட மறந்துவிட்டன என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சி யுடுயூப்பிலும், வெளியானது. இணையதளங்கள், பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை படித்த மதராஸ் கால்நடை துயர் தடுப்பு கழக (எஸ்.பி.சி.ஏ.) அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    நேரில் விசாரணை

    நேரில் விசாரணை

    மயில்சாமியின் பேச்சு, பிராணி வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுதொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் தலைமையில் முதன்மை ஆய்வாளர் தவுலத்கான், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மயில்சாமி மனு

    மயில்சாமி மனு

    விசாரணையின்போது நடிகர் மயில்சாமி அதிகாரிகளிடம் ஒரு மனு ஒன்றை அளித்தார். அதில், பிராணிகளையோ அல்லது பறவைகளையோ வதைப்பது எனக்கு உடன்பாடான ஒன்று அல்ல பிராணிவதை தடுப்பு சட்டப்படி எந்த ஒரு தவறையும் செய்யவில்லை.

    உண்மையில்லை

    உண்மையில்லை

    நகைச்சுவைக்காக, ஒரு நகைச்சுவை நடிகன் என்ற முறையில், பேச்சில் ஒரு ‘ஜனரஞ்சகம்' இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவ்வாறு பேசினேன். ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடக்கவில்லை.

    மனவருத்தம்

    மனவருத்தம்

    குரங்குகளுக்கு நகைச்சுவைக்காக மதுவை குடிக்க கொடுத்ததாக பேசியிருந்ததே பிராணி வகை தடுப்பு சட்டப்படி குற்றமாகும் என்று எனக்கு இப்போது தெரிய வருகிறது. இது மிகுந்த மன வேதனையும், வருத்ததையும் தருகிறது. எனவே நான் மேற்கண்டவாறு பேசியது தவறு என்றும், அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    மயில்சாமிக்கு அறிவுரை

    மயில்சாமிக்கு அறிவுரை

    இது குறித்து எஸ்.பி.சி.ஏ. அதிகாரி தி.தியாகராஜன் கூறுகையில், ‘‘குரங்குகளுக்கு மது ஊற்றியது தொடர்பான பேச்சு, நகைச்சுவைக்காக மட்டுமே பேசியதாக நடிகர் மயில்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை இனி நகைச்சுவைக்காக கூட பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

    எனவே மக்களே, சுனாமியில் சுவிம்மிங் அடிப்பேன் என்பது போல எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்காதீங்க.. உஷார்.!

    English summary
    Comedian Mayilsamy has been warned by SPCA officials for his 'just for fun' speech on Monkeys.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X