»   »  காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?

காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் - ரஞ்சித் இணையும் புதிய படத்துக்கு காலா கரிகாலன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

காலா என்பது பிரதானமாக பெரிய எழுத்துக்களிலும், கரிகாலன் என்பதை அதற்கு அடியிலும் வரும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.


Meaning for Kala

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று அர்த்தம். அதாவது மும்பையில் வாழும் தமிழர்கள், தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று குறிப்பிடும் வகையில் காலா எனக் குறிப்பிடுவார்கள். மலையாளிகள் தமிழர்களைப் பாண்டி என்று குறிப்பிட்டு கேலி செய்வதைப் போல!


காலா என்றால் எமன்... காலன் என்றும் அர்த்தம்.


காலாவுக்கு அடுத்து கரிகாலன் என்று வருவதால், படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன் என்று இருக்கலாம். கரிகாலன் என்பதைத்தான் காலா என்று அழைப்பது போல கதை அமைத்திருக்கலாம்.


கரிகாலன் என்பது தமிழர்களின் தொன்மப் பெயர். தமிழ் இனத்தின் மாமன்னன் கரிகாலனைக் குறிப்பிடுவது. 'பச்சைத் தமிழர்' ரஜினிக்கு மிகப் பிடித்த மன்னன் இந்த கரிகாலன். லிங்கா படத்தில் கூட கல்லணையின் உறுதித் தன்மையைக் கூறி கரிகாலனின் பெருமையைக் குறிப்பிடுவார்.

English summary
What is the meaning for the word Kala (Rajini movie title)? Here is the description.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil