»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

முன்னாள் மிஸ் சென்னையும், அலை பாயுதே உள்ளிட்ட சில படங்கள், டிவி தொடர்களில் நடித்தவருமானமேதாவை லண்டனில் வைத்து கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2000ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவர் சில டிவி தொடர்களை கம்பியரிங்செய்து வருகிறார்.

கடந்த வாரம் இவரைச் சந்தித்த அசோக்நகரைச் சேர்ந்த இருவர் லண்டனில் ஒரு கலை நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்க வருமாறு அழைத்தனர். முன் பணமும் கொடுத்தனர். விமான டிக்கெட், விசாவையும் ஏற்பாடு செய்துதந்தனர். இதையேற்று அவர்களுடன் மேத்தா லண்டன் சென்றார்.

லண்டன் சென்ற பின்னர் தான் அங்கு கலை நிகழ்ச்சியே நடக்கவில்லை என்று தெரியவந்தது. ஹோட்டலில்வைத்து இவரை பாலியல் பலாத்காரம் செய்ய அந்த இருவரும் முயன்றனர். இதையடுத்து ஹோட்டல் சிப்பந்திகள்உதவியுடன் இவர் தப்பினார்.

லண்டனில் வசிக்கும் தனது தோழிக்கு இதைத் தெரிவித்தார். இதையடுத்து தோழி இவரைக் காப்பாற்றி தனதுவீட்டில் வைத்திருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்.

சென்னை வந்திறங்கியதும் இந்த இருவரும் சென்னை மாநகர காவல்துறை கமிஷ்னர் விஜய்குமாரைச் சந்தித்துபுகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷ்னர் திரிபாதி, அசோக் நகர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்ஆகியோர் தலைமையில் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அசோக் நகரைச் சேர்ந்தஅந்த இருவரின் கூட்டாளிகளையும் பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும மத்திய அரசின் உதவியோடு அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லண்டன் போலீசாரையும்தொடர்பு கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil