»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகையும் மாடலுமான மேதா விலாசினியின் பரபரப்பான புகாரையடுத்து மாடலிங் ஒருங்கிணைப்பாளர் அஜீத்மேனனும், அவரது மாமா ஜெய்சங்கரும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

மாடலிங் போட்டிக்காக லண்டன் சென்றபோது, அஜீத் மேனன் தன்னைக் கற்பழிக்க முயற்சி செய்ததாக மேதாபரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இதை அஜீத்தின் தாயார் மறுத்துள்ளார். லண்டனில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மேதா ஒருபொருளைத் திருடியதாகவும் பின்னர் அஜீத் சொன்னதால் அவரை விடுவித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் அஜீத்தை மேதா தாக்கியதாகவும், பதிலுக்கு அஜீத் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், மேதாவின் தாயார் தாட்சாயிணி இது குறித்துக் கூறுகையில், லண்டனில் கடையில் மேதா திருடியதாகவேபொய்யாக புகார் கூறி விஷயத்தைத் திசை திருப்ப அஜீத் குடும்பம் முயற்சிக்கிறது. அப்படியே மேதாதிருடியதாகவே வைத்துக் கொள்வோம். அஜீத் சொன்னால் லண்டன் கடைக்காரர்கள் விட்டுவிடுவார்களா என்ன?அஜீத் என்ன லண்டனில் அவ்வளவு செல்வாக்கு மிக்கவரா? பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா என்றார்.

இந் நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிட்ட அஜீத் மேனனும், அவரது மாமா ஜெய்சங்கரும் தற்போதுதலைமறைவாக உள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

மேலும் லண்டனில் வைத்து மேதாவைக் கற்பழிக்க அஜீத் முயலவில்லை என உடன் இருந்த பிற மாடலிங்அழகிகளில் சிலர் போலீசிடம் கூறியுள்ளனர். ஆனால், இவ்வாறு சொல்லுமாறு அவர்களை அஜீத் செட்-அப்செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அஜீத்தின் நடவடிக்கைகள் சரியானவை இல்லையென்றாலும் கூட, மேதா கூறியபடி கற்பழிப்பு முயற்சிநடக்கவில்லை என்று பெங்களூரைச் சேர்ந்த சில மாடல் பெண்கள் (இவர்களும் லண்டன் சென்று திரும்பியவர்கள்தான்) அசோக் நகர் போலீஸாரிடம் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மேதாவிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார், அஜீத் மேனனின் தந்தை ராஜகோபாலிடமும் விசாரணைநடத்தியுள்ளனர்.

  • நடிகை மேத்தாவை கற்பழிக்க முயற்சி

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil