»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மாடல் அழகி மேதா விலாசினியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜீத் மேனனை வருகிற 19ம் தேதி வரைகைது செய்ய சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லண்டனில் நடந்த மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது அஜீத் மேனன் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறி மேதா சென்னை அசோக் நகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அஜீத் மேனன், அவரது உறவினர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில்முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

மேதா உள்ளிட்ட அழகிகளை அவர்கள் சம்மதத்துடன்தான் லண்டன் அழைத்துச் சென்றேன். லண்டனில் ஒருகடையில் திருடும்போது மேதா மாட்டிக் கொண்டார். அது தொடர்பாக நான் கண்டித்தது பிடிக்காமல், மேதாகுடித்துவிட்டு வந்து என்னை அடித்தார். நான் திருப்பி அடித்தேன். இருவரும் கட்டிப் புரண்டு சண்டைபோட்டோம்.

அதன்பின் மேதாவை இந்தியாவிற்குத் திருப்பியனுப்பி விட்டோம். இது உடன் வந்த மாடலிங்அழகிகள்அனைவருக்கும் தெரியும். அவர்கள் இது குறித்து சாட்சியம் அளிக்க உள்ளனர். லண்டன் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, எனக்கு அதிகமாகப் பணம் கிடைத்திருக்கும் என்று நினைத்தும், பணத்துக்குஆசைப்பட்டுமே மேதா இந்த பொய்ப் புகார் அளித்துள்ளார்.

நான் நிரபராதி. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும்ஏற்றுக் கொள்ளத் தயாராகி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அவர்களது மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், இது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்குமாறும், அஜீத்மேனனை அது வரை கைது செய்யக் கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

  • மேதா விவகாரம்: அஜீத் மேனனை பிடிக்க தனிப்படைகள்
  • மாடல் மேதாவின் கற்பழிப்பு புகார்: முன் ஜாமீன் கோரும் அஜீத் மேனன்
  • நடிகை மேத்தாவை கற்பழிக்க முயற்சி

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil