»   »  தியேட்டர்களை விழுங்க வரும் மீடியா ஒன்

தியேட்டர்களை விழுங்க வரும் மீடியா ஒன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை விலைக்கு வாங்கும் பெரும் முயற்சியில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

படத் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள நிறுவனம் மீடியா ஒன். இந்த நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை விலைக்கு வாங்கும் பெரும் வேலையில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் செங்கல்பட்டில் உள்ள 3 தியேட்டர்களை விலைக்கு வாங்கியது. இதுதவிர இந்த ஆண்டு மேலும் 20 தியேட்டர்களை விலைக்கு வாங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூர்யராஜ்குமார் கூறுகையில், திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையிடுதல் ஆகிய மூன்று துறைகளிலும் முன்னணியில் விளங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை படிப்படியாக விலைக்கு வாங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். தியேட்டர்களை விலைக்கு வாங்கி அவற்றைப் புதுப்பித்து நவீனமாக்கி படங்களைத் திரையிடுவோம்.

இந்தப் பணிக்காக விரைவில் ரூ. 90 கோடி நிதியை முதலீடு செய்யவுள்ளோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பாக்யலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பட விநியோகத்தையும் மேற்கொள்ளவுள்ளோம்.

எங்களது நிறுவனத்திற்கு தற்போது ரூ. 37 கோடி ரூபாய் வருமானம் உள்ளது. இதை 2008ம் ஆண்டு நிதியாண்டின் இறுதியில் 6 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil