»   »  நடிகைக்கு கேரளாவில் மருத்துவ பரிசோதனை... நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

நடிகைக்கு கேரளாவில் மருத்துவ பரிசோதனை... நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கார் டிரைவர் மற்றும் சிலரால் கடத்தில் மானபங்கப்பட்டுத்தப்பட்ட நடிகைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கும் நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷூட்டிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் டிரைவர் சுனில்குமார் திட்டமிட்டு ஆள் வைத்துக் கடத்தி, காரிலேயே 2 மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

Medical Check up for molested actress

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்த மார்ட்டின் உள்ளிட்ட மூவரை கேரள போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி காளமேச்சேரி பெண் நீதிபதியிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்கு மூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளமேச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பரிசோதனைகள் நடந்தன.

English summary
Actress, who was recently kidnapped and molested by 3 goons has undergone medical check up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil