»   »  செத்துப் போன காதல் ஜோடியின் செல்பி கல்யாணம்.. திகிலடிக்க வைக்கும் ஒரு திரைப்படம்!

செத்துப் போன காதல் ஜோடியின் செல்பி கல்யாணம்.. திகிலடிக்க வைக்கும் ஒரு திரைப்படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு நண்பர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முயலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு தயாராகியுள்ளது ஒரு படம்.

காதல் அல்லது பேய், இந்த இரண்டிற்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. காதலில் பலவகைகளை நம் இயக்குநர்கள் படம் பிடித்து காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்ப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களுக்கு, சொர்க்கத்தில் அல்ல, பூமியிலேயே திருமணம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்.

காதல் நிறைவேறாத ஜோடிகள் தற்கொலை செய்யும் கதை வந்திருக்கிறது. அப்படி தற்கொலை செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஷாக் கதையுடன் உருவாகி உள்ளது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்'.

ஒரே கயிறில் தூக்கு...

ஒரே கயிறில் தூக்கு...

இப்படம் தொடர்பாக அதன் இயக்குநர் எஸ்.என்.அரிராமன் கூறுகையில், ‘இளம் காதல் ஜோடி இணைந்து வாழ முடியாதளவுக்கு தடை வருகிறது. அவர்கள் இருவரும் ஒரே கயிற்றில் தற்கொலை செய்கின்றனர்.

செல்பி திருமணம்...

செல்பி திருமணம்...

அந்த காட்சியை செல்பி எடுக்கின்றனர். இறந்த ஜோடிகளுக்கு ஊர் மைதானத்தில் திருமணம் செய்துவைக்க முயல்கின்றனர் நண்பர்கள்.

கிளைமாக்ஸ்...

கிளைமாக்ஸ்...

இந்த தகவல் போலீசுக்கு தெரிந்து தடை விதிக்கிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல் தீர்கிறதா என்பதுதான் கிளைமாக்ஸ்' எனத் தெரிவித்துள்ளார்.

நாயகன், நாயகி...

நாயகன், நாயகி...

இப்படத்தில் செல்வம், அபினிதா காதலர்களாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர சரவணன், காதல் தண்டபாணி, கற்பகம், சிங்கமுத்து, பாலாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

English summary
Meenakshi kadhalan ilangovan is a upcoming tamil film directed by Ariraman, in which love is shown in different perspective.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil