»   »  ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்

ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படப்பிடிப்பு தளத்தில் தான் பெரிய பணக்காரி என்று பொய் சொன்னதால் பாலிவுட் நடிகை மீனாட்சி தாப்பா சக நடிகர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரின் முன்னாள் கார் டிரைவர் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கொல்லப்பட்ட பாலிவுட் நடிகை மீனாட்சி தாப்பா பற்றி நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.

நடிகைகளுக்கு படப்பிடிப்பு தளத்தில் கூட பாதுகாப்பு இல்லை என்பதையே மீனாட்சியின் விவாகரம் நிரூபிக்கிறது. அதன் விபரம் வருமாறு,

 மீனாட்சி

மீனாட்சி

டேராடூனை சேர்ந்த மீனாட்சி தாபா ஒரு டான்ஸர். பாலிவுட் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அப்போது தான் அவருக்கு மாதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 பெருமை

பெருமை

படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளான அமித் ஜெய்ஸ்வால் மற்றும் அவரது காதலி ப்ரீத்திக்கு மீனாட்சி பழக்கமானார். தான் பெரிய பணக்காரி என்றும், பொழுதுபோக்கிற்காக நடிக்க வந்ததாகவும் மீனாட்சி அவர்களிடம் தெரிவித்தார்.

கடத்தல்

கடத்தல்

பண தேவையில் இருந்த அமித் மற்றும் ப்ரீத்தி மீனாட்சியை கடத்தி அவரது தாயிடம் ரூ.15 லட்சம் கேட்க அவரோ ரூ.60 ஆயிரம் மட்டும் ஏற்பாடு செய்ய முடிந்தது என்றார். அதன் பிறகே மீனாட்சி தான் ஒரு பணக்கார வீட்டு பெண் என்று கூறியது பொய் என அவர்களுக்கு தெரிய வந்தது.

கொலை

கொலை

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அமித் மற்றும் ப்ரீத்தி மீனாட்சியை கொன்று தலையை துண்டித்து ஒரு பையில் போட்டு பேருந்தில் பயணம் செய்தனர். ஓடும் பேருந்தில் இருந்து அந்த பையை தூக்கி வீசினர். உடலை தண்ணீர் தொட்டியில் போட்டனர்.

English summary
26-year old Bollywood actress Meenakshi Thapa was murdered by her co-stars after she boasted of her wealth at the shootingspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil