»   »  மாண்டலின் சீனிவாஸ் தம்பியுடன் கல்யாணமா?:மீரா ஜாஸ்மின் திட்டவட்ட மறுப்பு

மாண்டலின் சீனிவாஸ் தம்பியுடன் கல்யாணமா?:மீரா ஜாஸ்மின் திட்டவட்ட மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு யாருடனும் இன்னும் கல்யாணம் ஆகவே இல்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு மளமளவென நிறையப் படங்களில் நடித்து முடித்து விட்டார். முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.

பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், மலையாள இயக்குநர் லோகிததாஸுடன் படு நெருக்கமாக இணைத்து பேசப்பட்டார். இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகக் கூட கூறப்பட்டது.

கடைசியாக இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்துப் ேபசப்பட்டார் மீரா ஜாஸ்மின். இருவரும் பெங்களூரில் உள்ள சர்ச்சில் வைத்து கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

இந் நிலையில், மீரா ஜாஸ்மினுக்கும், மாண்டலின் கலைஞர் சீனிவாஸின் தம்பி ராஜேஷுக்கும் திருப்பதியில் வைத்து கல்யாணம் முடிந்து விட்டதாக திடீர் செய்தி கிளம்பியது. கடந்த மாதம் 21ம் தேதி ரகசியக் கல்யாணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது நேபாளி படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தது. அப்போது திடீரென இயக்குநர் துரையை அணுகிய மீரா ஜாஸ்மின், நான் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று கூறினாராம்.

ஆனால் ஷூட்டிங்குக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதாகவும், நீங்கள் இல்லாவிட்டால் பல லட்சம் நஷ்டம் ஏற்படுமே என்றும் துரை கூறியுள்ளார். ஆனால் படு அவசரமாக இருந்த மீராவோ, எப்படியாவது சமாளித்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சியபடி கூறி விட்டு அங்கிருந்து தனது உதவியாளர்களுடன் திருப்பதிக்குப் பறந்தாராம்.

அங்கு வைத்துத்தான் மாண்டலின் ராஜேஷை கல்யாணம் செய்து கொண்டார் மீரா என்று தகவல் பரவியது.

மேலும் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும் மீராவைக் காதலிக்க ஆரம்பித்த பின் அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் ராஜேஷ் அங்கு போய் விடுவார் என்றும் கூறப்பட்டது.

ராஜேஷை கல்யாணம் செய்து கொள்வதற்கு மீராவின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் ஆனால் அதைப் புறக்கணித்த மீரா, தனது காதலரை கைப்பிடித்துள்ளார் என்றும் தகவல்கள் பரவின.

சென்னையில் இருவரும் தனிக் குடித்தனத்தையும் ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் சமீபத்தில் சென்னையில் ராஜேஷ் பங்கேற்ற இசை நிகழ்ச்சிக்கு மீராவும் வந்திருந்தார். ராஜேஷ், மீரா கல்யாணத்தை அறிந்திராதவர்களுக்கு மீராவின் வருகை வித்தியாசமாக தெரிந்துள்ளது. காரணம் தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த அந்த இசை நிகழ்ச்சிக்கு, இசைத் துறையைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் வந்திருந்தனர். மீராவின் வருகை அவர்களுக்கு குழப்பத்ைத ஏற்படுத்தியதாம்.

இந்தத் திருமணச் செய்தியை உறுதிப்படுத்த மாண்டலின் ராஜேஷ் வீட்டைத் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது உறவினர் ஒருவர்தான் பேசினார்.

தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர், வீட்டில் ராஜேஷ் இல்லை என்றும் அவர் வெளியூர் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். ராஜேஷ் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும், வெளியில் போயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இந்தச் செய்தி தொடர்பாக ராஜேஷின் கருத்தை அறிய முடியவில்லை.

இந் நிலையில் இந்த திருமணச் செய்தியை மீரா ஜாஸ்மின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து மீரா ஜாஸ்மின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த செய்தியை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அது அடிப்படை இல்லாத வதந்தி. சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள் என்னைத் திட்டமிட்டு பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன. சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வந்தது.

ஏன்தான் என்னைப் படுத்துகிறார்களோ தெரியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றும் புரியவில்லை. இந்த செய்திகளால் நான் அப்செட் ஆகியுள்ளேன். தயவுசெய்து நம்புங்கள், இந்த நிமிடம் வரை எனக்கு யாருடனும் கல்யாணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார் மீரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil