twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிக்கலில் சிக்கும் மீராமிதுன்.. கோர்ட்டையும் மதிப்பதில்லை.. போலீஸையும் மதிப்பதில்லை

    |

    சென்னை: யூடியூப் சேனலில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தையும் போலீஸையும் மதிக்காமல் நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சமூக வலைதளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வந்த நடிகை மீரா மிதுன் உச்ச நடிகர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பேசி பெரும் சிக்கலில் சிக்கினார்.

    2021ல் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான சிறந்த 4 திரைப்படங்கள்!2021ல் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான சிறந்த 4 திரைப்படங்கள்!

    அதன் பின்னர், எந்தவொரு முன் சிந்தனையும் இல்லாமல் வெறும் யூடியூப் வியூஸ்க்காக பட்டியலின மக்கள் மீது அவதூறு கருத்து பரப்பி கம்பி எண்ணினார்.

    சர்ச்சையும் மீரா மிதுனும்

    சர்ச்சையும் மீரா மிதுனும்

    சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் வறு பட்டு வந்தவர் நடிகை மீரா மிதுன். சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு இயக்குநர் சேரனுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பினார்.

    விஜய், சூர்யா

    விஜய், சூர்யா

    நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தன்னை பார்த்து காப்பி அடிப்பதாக பதிவுகளை போட ஆரம்பித்த மீரா மிதுன் இப்படியெல்லாம் பேசினால் வைரல் ஆகலாம் என நினைத்துக் கொண்டு வரம்பு மீறி விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பற்றியும் நடிகர்களின் மனைவிகள் குறித்தும் தவறான முறையில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    சிக்கலில் சிக்கிய மீரா மிதுன்

    சிக்கலில் சிக்கிய மீரா மிதுன்

    நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பெரிய ஆளாக மாறி விடலாம் என தப்புக் கணக்கு போட்ட நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய நிலையில் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டார். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

    சிறை தண்டனை

    சிறை தண்டனை

    வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றனர். தொடர் முயற்சிக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் மீரா மிதுன்.

    கோர்ட்டை மதிக்கவில்லை

    கோர்ட்டை மதிக்கவில்லை

    நடிகை மீரா மிதுன் மற்றும் அவர் நண்பர் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதன் நகல்களை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், நடிகை மீரா மீதுன் ஆஜராகவில்லை.

    ஜாமின் ரத்து

    ஜாமின் ரத்து

    ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் மீரா மிதுன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீராமிதுன் நிறைவேற்றவில்லை இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றவில்லை ஏன்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

    விவரம் தெரியாத நடிகர்கள்

    விவரம் தெரியாத நடிகர்கள்

    சினிமாவில் நீதிமன்றம் குறித்தும் போலீசார் குறித்தும் சர்வ சாதாரணமாக பஞ்ச் பேசும் பல நடிகர்கள் நிஜ வாழ்வில் சாதாரண குற்ற வழக்கு தொடர்பான எந்தவொரு புரிதலும் உள்ளதை பல முறை பார்க்க முடிகிறது. குடித்து விட்டு கார் ஓட்டிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகமல் ஏதோ கொலை குற்றம் செய்ததை போல சில முன்னணி நடிகர்களே ஓடி ஒளிந்த கதைகள் எல்லாம் நடந்துள்ள நிலையில், மீரா மிதுன் நீதிமன்றத்தை இப்படி அவமதித்துக் கொண்டிருந்தால் ஜாமின் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Meera Mithun avoid to attend the bail procedures and lands in big trouble after Madras High Court warns her and talks about her bail will cancel if she is not attending to the next hearing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X