மீரா மிதுனை தேடும் போலீஸார்… கண்டுபிடித்து தர வேண்டும் என தாயார் புகார்… இது என்ன கொடுமையா இருக்கு?

சென்னை: நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

ஆனால், மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

போலீஸாரும் மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அவரது தாயார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

மீரா மிதுனின் சர்ச்சை

மீரா மிதுனின் சர்ச்சை

மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமான மீரா மிதுன், '8 தோட்டாக்கள்' 'தானா சேர்ந்தக் கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனால் மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற நிலையில், ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த விசாரணையில் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜாரானார், மீரா மீதுன் தலைமறைவானார். இதனால், மீரா மிதுனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

தலைமறைவு வாழ்க்கை

தலைமறைவு வாழ்க்கை

இந்நிலையில், இந்த வழக்கு அடுத்தடுத்து விசாரணைக்கு வந்த போதும், மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த காவல்துறை, மீரா மிதுன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவே போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திணறும் போலீசார்

திணறும் போலீசார்

மேலும், மீரா மிதுனின் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதால், தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என போலீஸார் தெரிவித்திருந்தனர். அதேநேரம் மீரா மிதுனின் குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் அவரை கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாயார் புகார்

தாயார் புகார்

இந்நிலையில், மீரா மிதுனின் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் மீரா மிதுனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் எங்களுடன் தொடர்பில் இல்லை என்றும், வழக்கை சந்தித்து வந்தபோதிலும், எங்களிடம் தொடர்பில் தான் இருந்தார். ஆனால் இப்போது செல்போனிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே மீரா மிதுனை கண்டுபிடித்து தருமாரு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வரும் நிலையில், இப்போது மீரா மிதுனின் தாயார் கொடுத்த புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X