twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்டிப்பாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.. நடிகை மீரா மிதுன் அதிரடி!

    |

    சென்னை: சமூக விழிப்புணர்விற்காக நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என நடிகை மீரா மிதுன் திட்டவட்டமாக
    தெரிவித்துள்ளார்.

    நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மீரா மிதுன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சேரன் மீது சாட்டிய குற்றத்தால் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். பின்னர் தனது முன்னாள் மேனேஜரான ஜோ மைக்கெலை ஆளை வைத்து தூக்குமாறு அவர் அபேசிய ஆடியோ வெளியாகி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது.

    அய்யயோ என்னாச்சு உங்களுக்கு.. எமியின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!அய்யயோ என்னாச்சு உங்களுக்கு.. எமியின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

    ஆடியோக்கள்

    ஆடியோக்கள்

    தொடர்ந்து சேரன் குறித்து தவறாக எழுத வேண்டும் என்று தனது நண்பரிடம் பேசிய ஆடியோவும் பின்னர் தானும் முகெனும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை பரப்ப வேண்டும் என்று கூறிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    விமர்சனம்

    விமர்சனம்

    இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் இருந்து நீக்கப்பட்ட அவர், பாலிவுட்டுதான் தனது திறமைக்கு சரியான இடம், தமிழ்நாடே வேண்டாம் என கூறி மும்பை சென்றார். அங்கு இருந்தபடியே தமிழக அரசை விமர்சித்து டிவிட்டி வந்தார்.

    பிரதமரிடம் புகார்

    பிரதமரிடம் புகார்

    மேலும் தனக்கு அநீதி இழைத்த சென்னை போலீஸை கூண்டோடு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு டிவிட்டர் வாயிலாக புகார் கூறினார். அதோடு நிறுத்தாத மீரா கையில் தம், பப்பில் டான்ஸ், அரை நிர்வாண போட்டோக்கள் என வெளியிட்டு டாக் ஆஃப் த டவுனாக இருந்து வருகிறார்.

    பேமென்ட் தரவில்லை

    பேமென்ட் தரவில்லை

    தற்போது சென்னை வந்துள்ள மீரா மிதுன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பேமென்ட்டை விஜய் டிவி தரவில்லை என்று சரமாரியாக சாடினார்.

    அரசியலுக்கு வருவேன்

    அரசியலுக்கு வருவேன்

    தொடர்ந்து பேசிய மீரா மிதுன், இந்த சமுதாயம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. சமூக விழிப்புணர்வுக்காக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். எந்தக் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று இப்போது கூற விரும்பவில்லை.

    மும்பைதான் பாதுகாப்பு

    தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இங்கு இருக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகள் உள்ளன. மும்பையில் தங்கி உள்ளேன். அங்கு பாதுகாப்பாக உணர்கிறேன்.

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் சரியாக உள்ள மாநிலத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு என உணருகிறேன். இவ்வாறு மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Meera mithun wants to be in politics. She said in press meet in future i will defenitely come to politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X