»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கேரள முதல்வர் உம்மன்சாண்டி முன்னிலையில் நடந்த திரைப்பட விழாவில் சர்ச்சைக்கள்ளாகியிருக்கும் நடிகைமீரா ஜாஸ்மின் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார் உம்மன் சாண்டி.

தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மீராஜாஸ்மின். இதைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மின் வீட்டை விட்டு வெளியேற இயக்குநர் லோகிதா தாஸ்தான் காரணம்என்று அவரது பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந் நிலையில் தனது சொத்துக்களை குடும்பத்தினர் பறித்துக் கொண்டதாகக் கூறி மீரா ஜாஸ்மின் கோட்டயம்காவல்துறை டி.ஐ.ஜியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கோட்டயத்தில் 2003ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்ற மீராஜாஸ்மின், காளிதாசன் (நடிகர் ஜெயராமின் மகன்) ஆகியோருக்குப் பாராட்டு விழா மற்றும் தேசிய கேரளதிரைப்பட விழா தொடக்க விழாவும் நடத்தப்பட்டது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன்முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மீரா ஜாஸ்மின் மிகவும் உருக்கமாக பேசினார். பணம் இன்று வரும், நாளைபோகும். ஆனால் உறவுகள் போனால் திரும்பி வராது.

பணத்தை காரணமாக வைத்து எனது உறவுகளே எனக்கு பகைவர்களாகி விட்டனர். இதுவரை பணத்தைப் பற்றிநான் கவலைப்பட்டதில்லை. ஆனால் பணம்தான் முக்கியம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன்.

எனது பணம் முழுவதையும் பறித்துக் கொண்டு எனது உறவுகளே என்னை நிர்க்கதியாக நிறுத்தி விட்டனர் என்றுகூறிய மீரா கதறி அழுதார். மீராவின் பேச்சையும், அவரது அழுகையையும் பார்த்த கூட்டத்தினர் அமைதியில்உறைந்தனர்.

தனது பேச்சை முடித்து விட்டு வந்த மீராவை அழைத்த உம்மன் சாண்டி, என்ன பிரச்சினையாக இருந்தாலும்கவலைப்பட வேண்டாம் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார்.

இதற்கிடையே, மீரா ஜாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது சகோதரிகளிடம் கேரள போலீஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரது பெற்றோரிடமும் விசாரணை நடைபெறும் எனத்தெரிகிறது.

குடும்பத்தினர் மீது மீரா புகார்
காதலருடன் ஓடிப்போன மீரா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil