twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 வயசு இயக்குநர்.. 10ம் வகுப்பு படித்துக் கொண்டே படம் எடுக்கும் குட்டிப் பையன்.. எப்படி தெரியுமா?

    |

    கொச்சி: கேரளாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி, இப்பவே திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    15 வயதில் இயக்குநரா? என பலரையும் வாய் பிளக்க வைத்துள்ள ஸ்ரீஹரி, தனது 9வது வயதிலேயே குறும்படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்.

    38வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு.. பொருத்தமான ஜோடியாக இருந்த 5 நடிகைகள்.. யார் யார்னு பாருங்க! 38வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு.. பொருத்தமான ஜோடியாக இருந்த 5 நடிகைகள்.. யார் யார்னு பாருங்க!

    கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் 3 குறும்படங்களையும் இயக்கி இருக்கும் ஸ்ரீஹரிக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்பதை பார்ப்போம்..

    லாக்டவுன் தந்த மாற்றம்

    லாக்டவுன் தந்த மாற்றம்

    பள்ளி படிப்பை படித்துக் கொண்டே தனது நண்பர்களை வைத்து சின்ன சின்ன குறும்படங்களை இயக்கி வந்த ஸ்ரீஹரிக்கு கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுன் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே மாறியது. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், குறும்படத்தில் இருந்து திரைப்படத்தையே இயக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

    9 வயதிலேயே இயக்குநராக்கும்

    9 வயதிலேயே இயக்குநராக்கும்

    சின்ன வயதில் இருந்தே புகைப்படங்களையும், செல்போன் கேமரா மூலம் வீடியோக்களையும் எடுக்க ஆரம்பித்த ஸ்ரீஹரி, சினிமா மீது அலாதியான ஆர்வம் கொண்டு 9 வயதிலேயே குறும்பட இயக்குநராக மாறிவிட்டார். அதுவும் சாதாரண கதையை படமாக்காமல் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் மாணவர்களை பற்றிய கதையை 'புகா - தி கில்லிங் ஸ்மோக்' எனும் டைட்டிலில் படமாக்கி பாராட்டுக்களை அள்ளினார்.

    கேமரா பரிசு

    கேமரா பரிசு

    ஸ்ரீஹரியின் ஆர்வத்துக்கு பக்க பலமாக அவரது பெற்றோர்களான ராஜேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் கவிதா ராஜேஷ் உள்ளனர். ஸ்ரீஹரியின் 13வது பிறந்தநாளை முன்னிட்டு 'கேனான் 1500' வீடியோ கேமராவை பெற்றோர்கள் பரிசளித்த நிலையில், கடந்த ஆண்டு லாக்டவுனில் கிடைத்த நேரத்தை கொண்டு மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார்.

    3 குறும்படங்கள்

    3 குறும்படங்கள்

    கடந்த 24 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் சார்லஸ் என்பவரின் வாழ்க்கையை பற்றிய குறும்படத்தை 'சார்லஸ்' என்கிற டைட்டிலிலேயே எடுத்துள்ளார். கொரோனா காலத்தில் ஊரடங்கில் இருந்ததை பார்த்து, அப்போதும் உதவும் நபர்களை பற்றிய குறும்படமாக 'தி சைலன்ட் ரோட்ஸ்' எனும் தலைப்பில் ஒரு குறும்படத்தையும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த போது அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை வைத்து 'ஹட்ச்' எனும் குறும்படத்தையும் இயக்கி உள்ளார்.

    50 சதவீதம் ஓவர்

    50 சதவீதம் ஓவர்

    குறும்படங்களை இயக்கி வந்த ஸ்ரீஹரி, தற்போது 75 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். 'ஸ்தாயி' (Sthaayi) எனும் டைட்டிலில் உருவாகி வரும் அந்த திரைப்படத்தில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 15 பேரை நடிக்க வைத்துள்ளார். சாதாரண வாழ்வில் மண்டிக் கிடக்கும் சாதி, மதம், இன அரசியலை தோலுரிக்கும் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவடைந்து விட்டதாம்.

    என்ன பட்ஜெட்

    என்ன பட்ஜெட்

    வெறும் 25 ஆயிரம் ரூபாயில் இந்த யதார்த்தங்கள் நிறைந்த திரைப்படத்தை ஸ்ரீஹரி இயக்கி வருகிறார். ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் மலையாள இயக்குநர்களான லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மற்றும் ராஜீவ் ரவி உள்ளிட்டோர் தான் இவருக்கு இன்ஸ்பிரேஷனாம். இதில் இயக்குநர் ராஜீவ் ரவி ஸ்ரீஹரிக்கு பர்சனலாக பல அறிவுறைகளையும் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் மலையாள திரையுலகை ஆள இப்போதே தயாராகி வருகிறார் ஸ்ரீஹரி.

    English summary
    Srihari, a 15 year old young boy turned as a film maker in Kochi, Kerala. He directing a feature film titled Sthaayi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X