twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்தீஷ்கர் குக்கிராம வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்.... விசாரணைக்கு உத்தரவு

    |

    ரெய்கார்க்: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருவதாக முன்னாள் உலக அழகியும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராயின் பெயர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஆரத்யா என்ற குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில குக்கிராமத்தில் ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி வாக்காளர் அட்டை இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    குஹாரி கிராமத்தில்....

    குஹாரி கிராமத்தில்....

    சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் பதால்கான் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் குஹாரி கிராமத்தில் ஐஸ்வர்யராய் வசிப்பதாக அவரது பெயர் உள்ளது.

    தந்தை பெயர்....

    தந்தை பெயர்....

    அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 15-ல் ஜஸ்வர்யாராய் பெயர் இடம் பெற்று உள்ளது. அதில் ஐஸ்வர்யராய் (வயது23), குஹாரி கிராமம், வீட்டு எண் 376 என்ற முகவரியில் அவரது தந்தையுடன் வசிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    புகைப்படத்துடன் கூடிய....

    புகைப்படத்துடன் கூடிய....

    மேலும், ஐஸ்வர்யா ராயின் தெளிவான புகைப்படத்துடன் அந்த வாக்காளர் பட்டியல் அமைந்துள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராயின் தந்தை என தினேஷ்ராய் என்பவரது பெயர் பதிவு செய்யப் பட்டுள்ளது.

    குழப்பம்....

    குழப்பம்....

    மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 23 வயதாவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யாராயின் பெயர் இவ்வாறு போலியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து ஜஷ்பூர் மாவட்ட கலெக்டர் எல்.எஸ்.கேன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணை....

    விசாரணை....

    ஐஸ்வர்யா ராய் அந்த பகுதியில் வசிக்கவில்லை. அப்படியிருந்தும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? புகைப்படம் மட்டும் மாறி விட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    English summary
    Aishwarya Rai Bachchan has mysteriously landed herself in the electoral list of Chhattisgarh's Jashpur district. And there's a picture of the Bachchan bahu too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X