»   »  ஜெனிலியாவின் செல்ல மகன் ரியான் இவர் தான்!

ஜெனிலியாவின் செல்ல மகன் ரியான் இவர் தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஜெனிலியாவின் கணவரும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தங்கள் மகன் ரியானின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜெனிலியா. பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் ஆண் குழந்தையை பெற்ற ஜெனிலியா அந்த குழந்தைக்கு ரியான் என்று பெயர் வைத்தார்.

ரித்தேஷ் தனது தந்தையும், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வருமான விலாஸ் ராவ் தேஷ்முக்கின் பிறந்தநாள் நினைவு தினத்தன்று தனது செல்ல மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ரியான்

என் தந்தையின் 70வது பிறந்தநாள் அன்று என் மகன் ரியான் பிறந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது என்று ரித்தேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குழந்தை

ரியான் எங்களை முழுமையாக்கியுள்ளான் என ரித்தேஷ் ட்வீட் செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஜெனிலியாவுக்கு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி

ரியான் தனது தாத்தாவுக்கு அவரின் 70வது பிறந்தநாள் அன்று அஞ்சலி செலுத்துகிறார் என்று கூறி குட்டிப் பையன் மலர் தூவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரித்தேஷ் தேஷ்முக்.

ஜெனிலியா

ஜெனிலியா

மீண்டும் படங்களில் நடிக்க தான் தயார் என்றும் ஆனால் தனக்கு ஏற்ற வாய்பு தான் வரவில்லை என்றும் அண்மையில் ஜெனிலியா தெரிவித்திருந்தார். அவர் இன்னும் எந்த புதுப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

English summary
Genelia's husband Riteish Deshmukh has shared the picture of their son Riaan taken on his dad's birth anniversary.
Please Wait while comments are loading...