»   »  மொத்தக் குடும்பத்துடன் புதுப்படத்துக்கு பூஜை போட்ட சிரஞ்சீவி... தம்பி பவன் கல்யாண் வரவில்லை

மொத்தக் குடும்பத்துடன் புதுப்படத்துக்கு பூஜை போட்ட சிரஞ்சீவி... தம்பி பவன் கல்யாண் வரவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படபூஜை இன்று கோலாகாலமாக நடைபெற்றது.

சுமார் 9 வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த சிரஞ்சீவி இன்று தன்னுடைய 150 வது படத்தை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்.

Mega Star Chiranjeevi's 150th Movie Launched

'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவரது மகன் ராம் சரண் இப்படத்தை, தன்னுடைய கொநிடிலா புரொடக்ஷன்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார்.

Mega Star Chiranjeevi's 150th Movie Launched

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் அல்லு அர்ஜுன், ராம் சரண், அல்லு சிரிஷ், அல்லு அரவிந்த் என்று சிரஞ்சீவியின் மொத்தக் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆனால் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான பவன் கல்யாண் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தெலுங்குத் திரையுலகில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mega Star Chiranjeevi's 150th Movie Launched

சமீபத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா திருமணத்திலும் பவன் கல்யாண் கலந்து கொள்ளவில்லை. இதனால் சிரஞ்சீவி-பவன் கல்யாண் உறவில் விரிசல் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட வருடங்களுக்குப் பின் சிரஞ்சீவியை திரையில் பார்க்கப்போகும் குஷியில் அவரது ரசிகர்கள் #Chiru150Launch, #Chiranjeevi போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை தேசியளவில் ட்ரெண்டடிக்க வைத்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பாக பவன் கல்யாணின் 'குஷி 2' பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Chiranjeevi's much awaited comeback film, which is the remake of Kaththi, had its formal launch today at Konidela Production Company's office. The event was strictly a family affair with all the mega heroes and family members present, except Pawan Kalyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil