»   »  தண்ணீர் தராத கர்நாடகா கட்டும் மேகதாது அணைக்கு தமிழக மணலா? கொதிக்கும் மன்சூர்: வீடியோ

தண்ணீர் தராத கர்நாடகா கட்டும் மேகதாது அணைக்கு தமிழக மணலா? கொதிக்கும் மன்சூர்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்டும் மேகதாது அணைக்கே தமிழகத்தில் இருந்துதான் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

பி.வி பிரசாத் தயாரித்து, இயக்கி, நடித்த படம் சகுந்தலாவின் காதலன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பி.வி.பிரசாத் அடுத்து தயாரிக்க உள்ள 'வேலை இல்லா விவசாயி' படத்தின் பூஜையும் அண்மையில் நடந்தது. இதில் விஷால், இயக்குநர் செல்வமணி, விக்ரமன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விஷால் பேசும்போது, மாநில அரசு கேளிக்கை வரியை நீக்கி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். மேலும் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், ஸ்நாக்ஸ் கட்டணம் என பொதுமக்கள் நிறையப் பணம் செலவிட வேண்டியுள்ளது. ஆகையால் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி சினிமா உலகம் வளர வகை செய்ய வேண்டும் என கூறினார்.

 சினிமாவுக்கு மட்டும் ஏன் இரட்டை வரி?

சினிமாவுக்கு மட்டும் ஏன் இரட்டை வரி?

இந்த விழாவில் ஜிஎஸ்டி வரி குறித்தும் மாநில அரசு குறித்தும் நடிகர் மன்சூர் அலிகான் மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒரே நாடு, ஒரு வரி என்று முழங்குகிறார்கள். அப்புறம் சினிமாவுக்கு மட்டும் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி என ஏன் இரண்டு வரிகளை விதிக்க வேண்டும்?

 சின்ஃபுல் இண்டஸ்ட்ரியா சினிமா?

சின்ஃபுல் இண்டஸ்ட்ரியா சினிமா?

சினிமா என்பது இயல், இசை, நாடகத்துறை என மூன்று பெரும் பிரிவுகளில் இருந்து உருவானது. ஆனால் அதனை சின்ஃபுல் இண்டஸ்ட்ரி என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. சினிமா பாவம் செய்யும் துறை என்றால் அதற்கு ஏன் பத்மஶ்ரீ விருதுகள் கொடுக்கிறீர்கள்?

 அமிதாப் மட்டும் வேண்டுமா?

அமிதாப் மட்டும் வேண்டுமா?

மத்திய அரசு, தன்னுடைய ஸ்வச் பாரத் திட்ட விளம்பரத்துக்கு சின்ஃபுல் துறையைச் சேர்ந்த அமிதாப்பச்சனை ஏன் நடிக்க வைக்கிறது? இது மாபெரும் அயோக்கியத்தனம். இந்த சின்ஃபுல் இண்டஸ்ட்ரியில் இருந்து வருகிற வருமானம் அரசுக்கு ஏன் வேண்டும்? இதை 'எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி' என்று மாற்றுங்கள்.

 சினிமாவில் இருந்துதானே முதல்வர்கள்!

சினிமாவில் இருந்துதானே முதல்வர்கள்!

இந்த சினிமா உலகில் இருந்து தானே பல அதிபர்கள், முதல்வர்கள். எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உருவாகியிருக்கிறார்கள்.

 கர்நாடகாவுக்கு தமிழகத்திலிருந்து மணல்

கர்நாடகாவுக்கு தமிழகத்திலிருந்து மணல்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியுள்ளது. கர்நாடகாவில் கட்டப்பட்டு வரும் மேகதாது அணைக்கு மணல் தமிழ் நாட்டில் இருந்துதான் செல்கிறது என்று கூறுகிறார்கள். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் மணல் அங்கு பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Bigg Boss Tamil, Mansoor Ali Khan trolls Bigg Boss-Filmibeat Tamil

அடுத்த மாநிலங்களுக்கு தமிழக மணல்

தமிழ்நாட்டில் இருந்து 10-15 லட்சம் டன் மணல் மாலத் தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவை தமிழக ஆற்றில் இருந்துதானே எடுக்கப்படுகிறது? - இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

English summary
Taking sand in Tamilnadu river and Megadhathu Dam is bulit by this sand. Why Tamilnadu government is not controlling this? asked Mansoor Ali khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil