Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Lifestyle
உங்கள் தலைமுடிக்கு புரோட்டீன் உடனே தேவை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒன்னு இல்ல..ரெண்டு இல்ல..மூனு ஹீரோயின்களுடன் அசோக்செல்வன்!
சென்னை : தமிழ் சினிமாவின் நவீன காதல் இளவரசனாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நடிகைகள் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் நடிகர் அசோக்செல்வன். தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
அசோக் செல்வன் ஆரம்ப காலங்களில் பல குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும், பிளாக் எனும் குறும்படத்தை எழுதி இயக்கியும் உள்ளார்.
வெற்றிகரமான
3
வது
நாள்,
5
வது
நாள்
என்று
விளம்பரம்..
பாக்யராஜ்
கிண்டல்!

அசோக் செல்வன்
2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலமாக சினிமா துறைக்கு அறிமுகமானவர் அசோக் செல்வன். நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல இளம் இயக்குனர்களின் பார்வை அசோக் செல்வன் மீது விழுந்தது. ஆனாலும் வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். பீட்சா 2 தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான படங்களைத் தந்தவர். ஒன்பது வருட காலங்களில் வெறும் 13 படங்களில் நடித்துள்ளார்.

மன்மதலீலை
மன்மதலீலை படத்திற்கு முன்பு அவர் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே. படம் சூப்பர்ஹிட் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்த அசோக் செல்வன் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்த படமாகும். இந்த படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தில் நடித்துள்ளார். மிரட்டலான படங்களை எடுத்த வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான கதையை இந்த படத்தில் கொடுத்து இருந்தார். அந்த சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மூன்று கதாநாயகிகள்
இந்த நிலையில் அசோக்செல்வன், அடுத்து நடிக்க உள்ள படத்திலும் 3 கதாநாயகிகள் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சி.எஸ். கார்த்திகேயன் இயக்கி வருகிறார். படத்திற்குகு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகிய மூவர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் மூவருக்கும் சம அளவில் கதையில் முக்கியத்துவம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று காதல்
பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பிறகுக வேலை தேடும் பருவம் என மூன்று காலகட்டத்தில் நடைபெறும் காதலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலத்தில் நடக்கும் நவீன கால காதலாக இல்லாமல், நேர்த்தியான காதல் கதையாக இருக்கும் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.